ஔசதம் - OWSHADHAM: உடல் எடை குறைய -->
Showing posts with label உடல் எடை குறைய. Show all posts
Showing posts with label உடல் எடை குறைய. Show all posts

Thursday, July 1, 2021

பித்த வெடிப்பு நீங்க- patha pitha vedippu tips in tamil

கால் பித்த வெடிப்புக்கு மருந்து
patha vedippu neenga tips in tamil


பாத பித்த வெடிப்புக்கு காரணங்கள்

கால நிலை மாற்றம் பனிக்காலத்தில் பாதத்தில் உள்ள கடுமையான தோல் பகுதி வரட்ச்சி அடைந்து வெடிப்புகள் உணாகும், உடலில் வாதம், பித்தம், கபம் சமசீர் நிலை கெட்டு பித்த நிலை பாதிப்பு அடைந்தாலும் பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகும். பாத அணிகலன்கள் ஓர் முக்கிய காரணமாகவும் உள்ளன ஒரே வடிவம் கொண்ட காலணிகளை தொடர்ந்து பயன்படுத்தாமல் அடிக்கடி மாற்றுவதாலும் குதிகாலில் வெடிப்பு உண்டாகுகின்றது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது

இரசாயானம் கலந்த நீர்களில் அதிக நேரம் நிற்க்கும் போதும், செடிகளுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தும் போதும் உரிய காலனிகளை பயன்படுத்தாமல் இருப்பதாலும் குதிகாலில் பனி வெடிப்புகள் போல பித்த வெடிப்புகள் தோன்றுகின்றன. 

பாத வெடிப்பு எதனால் வருகிறது

தொடர்ந்து பல மணி நேரம் தண்ணீரில் நிற்க்கும் போது குதி காலில் தோல் பகுதி நன்றாக ஊறி மாவு போன்று பெயர்ந்து வருகின்றன அந்த சமயத்தில் அதனை ஸ்கிரப்பர் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு அதனை சுத்த படுத்த தவறும் போது திரும்ப திரும்ப நீரில் ஊறி பின் காயும் பொழுது வெடித்து அந்த வெடிப்பில் அழுக்கு மற்றும் கிருமிகள் தொற்றி பித்த வெடிப்பாக மாறி வெடிப்பை ஏற்படுத்துகின்றன. 

பனிகாலங்களில் அதிகாலையில் எழுந்து வேலை செய்பவர்களுக்கும் இது போன்று பனி வெடிப்பு அல்லது பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகின்றன. சிலர் பல மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே பணி புரிவதாலும் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு அதிக உடல் எடை காரணமாகவும் பாதத்தில் வெடிப்புகள் உண்டாகின்றன.

பித்த வெடிப்பு போக என்ன செய்ய வேண்டும்

முதலில் பாத வெடிப்பு வாரமல் இருக்க சில வழிகளை பின் பற்றினாலே போதுமானது. குழிக்கும் போது அகன்ற கல் அல்லது சொர சொரப்பான சிமெண்ட் காரையில் காலின் பாத பகுதியை உராசி தேய்க்கும் போது ஒரு விதமான மாவு போன்று பாதத்தில் உள்ள அழுக்கு மற்றும் தோல் கழன்று வந்து பாதத்தை மென்மையாக்கி பாத வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பாத வெடிப்பு குணமாக தேங்காய் எண்ணெய்

சிறிய பாத வெடிப்புகள் போக அவ்வப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து ஆரம் நிலை வெடிப்புகளை குணப்படுத்தி மேலும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கிறது

பாத வெடிப்பு நீங்க மஞ்சள் மருந்து

பெண்கள் கால் பாதத்தில் ஏற்படும் ஆரம்ப நிலை பாத வெடிப்பு நீங்க மஞ்சள் 5கிராம் மருதாணி இலை 5 கிரம் சேர்த்து நன்றாக அரைத்து குழித்து முடித்த பின் அல்லது இரவு படுக்கைக்கு முன் பூசிவர நல்ல பலனை கொடுக்கின்றது. பெண்களின் பாத வெடிப்பு நீங்க சிறந்த மருந்தாகும்

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

ஆண்/பெண் இருபாலரும் பயன்படுத்த கூடிய வகையில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் என்ற வகையில் அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடியதுமானது கிளிசரின் இது கால் பாடங்களில் தடவி வர பாத வெடிப்பு வராமலும் ஏற்க்கனவே இருப்பின் அவை மேலும் விரிவடையாமலும் கட்டுபடுத்தி வைக்கின்றது

குதிகால் வெடிப்புக்கு மருந்து

கால் பாதத்தி உள்ள பித்த வெடிப்பு அல்லது பனி வெடிப்புகளினால் அதிகப்படியான வலி உண்டாகும் நடக்கவோ அல்லது படுக்கவோ சிரமாக இருக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் வெடிப்புகளின் மீது முட்களை போல் சதைகள் கணப்படும் அதனை வெந்நீரில் காலை ஊறவைத்து முடிந்த வரை நன்றக்க கழிவி காய்ந்த பின் வெடிப்பின் மீது தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி விட வலி நிற்க்கும் இது தற்க்காலிக தீர்வு மட்டுமே.

பாத வெடிப்புக்கு சித்த மருத்துவம்

பித்த வெடிப்புகான களிம்பு

  1. விளக்கெண்ணை - 50 g
  2. நல்லெண்ணை - 10 g
  3. தேங்காய் எண்ணை - 10 g
  4. புன்னை எண்ணை - 10 g 
  5. பிரம்ம தண்டு வேர் - சிறிது
  6. கண்ட கத்திரி இலை - சிறிது
  7. கடுக்காய் தூள் - 1 Spoon
  8. மஞ்சள் தூள் - 1 Spoon
  9. தேன் மெழுகு- 10 g

பித்த வெடிப்புகான களிம்பு செய்முறை

    இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும். சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)
    டபுள் பாயில் முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றி பத்திர படுத்தவும்.

    பித்த வெடிப்புகான களிம்பு பயன்படுத்தும் முறை

      பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து பிறகு வெந்நீரில் கழுவி ஈரத்தன்மை காய்ந்த பின் வெடிப்புகள் மறையும் படி களிம்பை பயன்படுத்தவும். தொடர்ந்து இக்களிம்பை ஒரு வாரம் பாத வெடிப்புகளின் மீது தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும். இக் களிம்பை சேற்றுப் புண்ணுக்கும் உபயோகிக்கலாம்.
      ஒளசதம்
      Owshadham

      Saturday, June 26, 2021

      புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் - pulungal arisi kanji payangal


      புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் 
      Pulungal Arisi Kanji Payangal


      காய்ச்சல் , உடல் அசதி மற்றும் செரிமானக் குறைபாட்டை போக்க உதவும் உன்னதமான கஞ்சி

       புழுங்கலரிசி புளிக் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

      1. புழுங்கலரிசிக் குருணை.          -  200 கிராம்
      2. புளி.                                                -  50  கிராம்
      3. உருவிய முருங்கைக் கீரை.      -  2 கைப்பிடி
      4. மிளகு.                                           -  10 கிராம்
      5. சீரகம்.                                           -  10 கிராம்
      6. தனியா.                                   -  2 தேக்கரண்டி
      7. பூண்டு (தோல் நீக்கி நறுக்கியது)   -  ஒரு கப்                                          
      8. சின்ன வெங்காயம்.                 -   அரை கப்
      9. தண்ணீர்.                                    -   750 மி.லி
      10. உப்பு.                             -  தேவையான அளவு
      புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை

      முதலில் புழுங்கலரிசிக் குருணையை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு  வறுத்தக்  குருணையை   கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். மிளகு , சீரகம் , தனியா  ஆகியவற்றை அம்மியில் நீர்விடாமல் தூள் செய்து கொள்ள வேண்டும்.குருணை நன்கு வெந்ததும் அதில் புளியைக் கரைத்து ஊற்றி பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்க்க வேண்டும்.

      பின்பு அதனுடன் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வெந்தபின்  உருவி வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.நன்கு வெந்ததும் இறக்கி வைத்து பொறுக்கும் சூட்டில் குடித்து வரவும்.


      புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள்

      இந்தக் கஞ்சியை காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் உண்டாகும் உடல் அசதி  உள்ளவர்கள் அருந்தி வந்தால் அவற்றிலிருந்து விடுபடலாம்.

      மேலும் இந்தக் கஞ்சியை ஜீரணக் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் செரிமானக் குறைபாடு நீங்கி ஜீரண சக்தியை சீராக்க உதவும் உன்னதமான கஞ்சி

      Friday, December 6, 2019

      நுரையீரல் நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம் - lung disease siddha treatment in tamil

      நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக காசு குடோரி லேகியம் 

      Nurai eeral noigal gunamaga kasu guderi legiyam

      நுரையீரல் நோய்கள் தமிழில், நுரையீரல் நோய் குணமாக, நுரையீரல் தொற்று நோய், நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் நோய் குணமாக, சளி குணமாக சித்த மருத்துவம், சளி குணமாக இயற்கை வைத்தியம், சளி குணமாக பாட்டி வைத்தியம், சளி குணமாக லேகியம், சளி சரியாக என்ன செய்ய வேண்டும், சளி சரியாக லேகியம், தொண்டை சளி சரியாக லேகியம், இருமல் சளி சரியாக லேகியம், Nurai eeral noigal gunamaga legiyam, nurai eeral problem symptoms in tamil, nurai eeral maruthuvam, nurai eeral legiyam, sali gunamaga enna seiya vendum, sali kunamaga maruthuvam, sali sariyaga enna seiya vendum, sali irumal kunamaga in tamil, sali kunamaga nattu maruthuvam, nenju sali kunamaga, nenju sali kunamaga tips
      நுரையீரல் நோய்கள் தமிழில், நுரையீரல் நோய் குணமாக, நுரையீரல் தொற்று நோய், நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் நோய் குணமாக, சளி குணமாக சித்த மருத்துவம், சளி குணமாக இயற்கை வைத்தியம், சளி குணமாக பாட்டி வைத்தியம், சளி குணமாக லேகியம், சளி சரியாக என்ன செய்ய வேண்டும், சளி சரியாக லேகியம், தொண்டை சளி சரியாக லேகியம், இருமல் சளி சரியாக லேகியம், Nurai eeral noigal gunamaga legiyam, nurai eeral problem symptoms in tamil, nurai eeral maruthuvam, nurai eeral legiyam, sali gunamaga enna seiya vendum, sali kunamaga maruthuvam, sali sariyaga enna seiya vendum, sali irumal kunamaga in tamil, sali kunamaga nattu maruthuvam, nenju sali kunamaga, nenju sali kunamaga tips

      காசு குடோரி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

      பகுதி 1

      1. சாதி கோஸ்டம் 10 கிராம்
      2. சித்தரத்தை  10 கிராம்
      3.  அக்கராரம்  10 கிராம்
      4. செவ்வியம்  10 கிராம்
      5. தாளிசபத்திரி  10 கிராம்
      6. அதிமதுரம்  10 கிராம்
      7. கண்டு பாரங்கி  10 கிராம்
      8. சுக்கு  10 கிராம்
      9. மிளகு 20 கிராம்

      பகுதி 2

      1. ஈயக்கொடிச்சாரு 170 மில்லி
      2.  தூதுவளைச் சாறு 170 மில்லி
      3. சங்கம் இலைச்சாறு 170 மில்லி
      4. கண்டங்கத்திரி சாறு 170 மில்லி

      பகுதி 3

      1. கற்கண்டு 1450 கிராம்
      2. பசுவின்பால் 500 மில்லி
      3. தேன்  200 மில்லி

      காசு குடோரி லேகியம் செய்முறை

       பகுதி 1 கூறப்பட்ட 9 சரக்குகளையும் உலர்த்தி நன்கு இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்க. அப்பால் கற்கண்டை பொடி செய்து ஒரு இரும்பு கடாயில் போட்டு பசுவின் பாலை விட்டு கரைத்து பகுதி 2ல் கூறப்பட்ட நான்கு சாறுகளையும் கூட்டி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாகுபதம் வரும் சமயம் முன் தயார் செய்த சூரணத்தை கொட்டி தேன் விட்டு கிண்டி கீழிறக்கி ஆறவிட்டு வழித்து கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்துக.

      காசு குடோரி லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

      இந்த லேகியத்தில் வேளைக்குப் புளியங்கொட்டை பிரமானம் காலை மாலை இரு நேரம் கொடுத்து வருக.

      காசு குடோரி லேகியம் பயன்கள்

      நாள்பட்ட ஈலை, இருமல், தீராத சுவாச காசம், கடுமையான தொண்டை சளி இவைகள் தீரும். நுரையீரல் சார்ந்த அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய முதன்மையான லேகியம்.
      ஒளசதம்
      Owshadham

      1. நுரையீரல்
      2. சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
      3. சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும்
      4. ஆடா தொடை
      5. ரோஜா மருத்துவ பயன்

      Wednesday, September 27, 2017

      நத்தை சூரி விதை பயன்கள் - nathai soori vithai maruthuva payan

      நத்தைசூரி விதை மருத்துவ பயன்கள்


      நத்தைசூரி மூலிகையில் விதையுள்ள பகுதி 


      நத்தைசூரி விதை 

      நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன இவைகளில் கிரமபுறங்களில் தாதரா என்று அழைக்கப்படும் மூலிகையும் நத்தை சூரி வகைகளில் ஒன்று. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன கலிதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

      நத்தைசூரி விதைகள் விந்து அணுக்களை உற்பத்தி செய்யவும் சித்த மருத்துவ மருந்துகளில் விதைகளை முறைப்படி சுத்தி செய்து, சூரணமாக்கி (துணை மருந்துகளும் உள்ளடக்கியது) ஆண்மை சம்பந்த பட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும்.

      நத்தை சூரி சூரணத்தையும், அமுக்கரா சூரணத்தையும் இருவேளையும் தளா ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர விந்து கெட்டிபடும்.

      நத்தை சூரி விதையை பொன்வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்டவைத்து அதனுடன் ஒரு டம்ளர் சுத்த பசும்பால் விட்டு இருவேளை குடித்து வர உடலில் தங்கியுள்ள உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்கம்.

      நத்தை சூரி சூரணத்தை தொடந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர உடல் எடைகுறைந்து தளர்த தசைகள் இறுகும். புற நத்தை சூரி விதைகளை விரும்பி உண்ணு வதனாலயே புறவின் தசைகள் இறுக்கமாக உள்ளது.

      நத்தைசூரி விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைப்பது மிகவும் அறிது கடைகளில் கிடைக்கும் சூரணம் நத்தைசூரியின் சமூலமே சூரணமாக கிடக்கும். ஆகையால் நத்தை சூரி மூலிகையை தேடி எடுத்து பயன்படுத்துவது சிறப்பு.
      நத்தைசூரி மூலிகை படம், நத்தைசூரி சூரணம், தாதரா செடி, நத்தைச்சூரி விதை, நத்தைசூரி விதை, நத்தை பயன்கள், நத்தைச்சூரி விதை, த்தைச்சூரி மூலிகை, நத்தைசூரி மூலிகை, நத்தை கறி பயன்கள், நத்தைசூரி மூலிகை படம், நத்தை சூரி மூலிகை மருத்துவ குணம், நத்தை சூரி விதை மருத்துவ குணம், நத்தைசூரி மருத்துவ குணங்கள், nathai suri photo, nathai suri in english, mooligai ragasiyam tamil, thathara ver, thathara plant image, nathai soori for weight loss, nathai choori in english, nathai soori videos, nathai suri vasiyam, nathai , choori choornam, mooligai ragasiyam tamil, thathara poodu, nathai choori powder, nathai choori in tamil, nathai choori in malayalam, nathai choori uses in tamil, nathai choori vidhai nathai choori seeds, nathai suri seeds, nathai soori seeds, nathaichoori seeds, nathaisuri seeds, nathaisoori seeds in tamil.

      Monday, May 11, 2015

      பேரிக்காய் - perikkai

      பேரிக்காய்  -  perikkai



      பேரிக்காய்  -  perikkai பேரிக்காய் மருத்துவ பயன்கள் குழந்தைகள் வாய்ப்புண் குணமாக பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன் உடல் எடை குறைய பேரிக்காய் புற்று நோய் பேரிக்காய் நீரிழிவு பேரிக்காய்  இதயம் வலுவடைய நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும் அழகான குழந்தை பிறக்க பேரிக்காய் வயிற்றுப் போக்கு எலும்பு மற்றும் தசை வளர்ச்சி பேரிக்காய்  ithayam palam pera, vaitrupokku, azhagaana kuzhanthai priakka, elumpu, thasai valarichikku, nirizhivu noi, puttru noi, udal edaiuraiya, udal usnam, vaaipun, perikkai maruthuva payan, perikkai kurippu

       பேரிக்காய் குறிப்பு.

      "பேரிக்காய் ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக அழைக்கப்படும்"
                            ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.


      பேரிக்காய் மருத்துவ பயன்கள்


      குழந்தைகள்

                                சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது
      குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும. 

      வாய்ப்புண் குணமாக:

                       வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.


      உடல் உஷ்ணம்

                       பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், வைட்டமின் சி சத்து மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது.

      உடல் எடை குறைய
                      பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உட்கொண்டு வந்தால், அவை உடல் எடை கணிசமாக குறைய உதவி புரியும்.

      புற்று நோய்

                        பேரிக்காய்யில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது  பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் தவராமல் சாப்பிடுவது நல்லது.

      நீரிழிவு

                     பேரிக்காய்யில் வைட்டமின் கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

       இதயம் வலுவடைய

                     அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் அன்னவர்கள் கூறியதாக அனஸ் அவர்கள் கூறுகிறார்கள்

       அழகான குழந்தை பிறக்க

                          கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் அதிகம் சாபிட்டால். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். 

      வயிற்றுப் போக்கு

                            உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

      எலும்பு மற்றும் தசை வளர்ச்சி

                  பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.