ஒளசதம் எளிய மருத்துவ குறிப்புகள் - Owshadham nattu maruthuvam tamil tips - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, December 7, 2019

ஒளசதம் எளிய மருத்துவ குறிப்புகள் - Owshadham nattu maruthuvam tamil tips

ஒளசதம் எளிய மருத்துவ குறிப்புகள் 

Owshadham eliya maruthuva kurippugal in tamil 

tamil eliya maruthuvam, எளிய மருத்துவம், எளிய மருத்துவ குறிப்புகள், எளிய சித்த மருத்துவ குறிப்புகள், காய்ச்சல் எளிய மருத்துவம், எளிய சித்த மருத்துவம், எளிய உணவு மருத்துவம், எளிய வீட்டு மருத்துவம், எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள், ஜீரணம் ஆக எளிய மருத்துவம், ஒளசதம் எளிய மருத்துவம், Owshadham Eliya maruthuvam, Owshadham Eliya maruthuva kurippugal, Owshadham Eliya siddha maruthuva kurippugal, Owshadham Eliya unavu maruthuvam in tamil, Eliya veetu maruthuvam, Owshadham Eliay iyarkai maruthuva kurippugal, Jeeranam aga eliya maruthuvam, Owshadham simple siddha medicine script in tamil
tamil eliya maruthuvam, எளிய மருத்துவம், எளிய மருத்துவ குறிப்புகள், எளிய சித்த மருத்துவ குறிப்புகள், காய்ச்சல் எளிய மருத்துவம், எளிய சித்த மருத்துவம், எளிய உணவு மருத்துவம், எளிய வீட்டு மருத்துவம், எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள், ஜீரணம் ஆக எளிய மருத்துவம், ஒளசதம் எளிய மருத்துவம், Owshadham Eliya maruthuvam, Owshadham Eliya maruthuva kurippugal, Owshadham Eliya siddha maruthuva kurippugal, Owshadham Eliya unavu maruthuvam in tamil, Eliya veetu maruthuvam, Owshadham Eliay iyarkai maruthuva kurippugal, Jeeranam aga eliya maruthuvam, Owshadham simple siddha medicine script in tamil

தீராத விக்கல்

ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக் கொள்ளுங்கள் நின்று போகும் தீராத விக்கல், ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.

கொட்டாவியை நிறுத்த 

கொட்டாவி வருவதற்கான காரணம் ஆக்சிசன் பற்றாக்குறை தான் அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க

குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும். அவ்வளவு தான் நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்

 வாய் துர்நாற்றத்தை போக்க

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா

வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

மூக்கடைப்பு நீங்க

மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

தலை பாரம் குறைய

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

மூக்கு ஒழுகுவது நிற்க

சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

ஜலதோஷம் 

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

இருமலை போக்கும் புளியம் பூ

புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும் இருமலை போக்கும்.

சூடு பட்டுவிட்டால்

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

உடல் எடை குறை

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் வெந்நீரில் சாப்பிட்டால் உடல் எடை வெகுவாக குறையும். அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சீரக ஆய்வு

சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சீரக தண்ணீர் பயன்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர்

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக உணவுகள்

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள்

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
ஒளசதம்
Owshadham