ரோஜா மருத்துவ பயன் - Roja maruthuva payan

ரோஜா மருத்துவ பயன் - Roja maruthuva payan


ரோஜா மருத்துவ பயன்
          கூர்நுனிப் பற்களுடன் சிறகமைப்புக் கூட்டிலைகளையும் இளஞ்சிவப்பு நிற நறுமண மலர்களையும் கொண்ட கூரிய வளைந்த முள் நிறைந்த  நேராக வளரும் குறுஞ்செடி தமிழகமெங்கும் பயிரடப்பெறுகிறது, இதைச் குறுந்தாமரை என்றும் குறிப்பிடப்படுதுண்டு. மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது

ரோஜா மருத்துவ பயன்

           பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும் குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும். 20 கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நிர் மலத்துடன் வெளியேறும்.
 
          பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5, 6 நாட்கள் வெய்யிலில் வைக்க குல்கந்து ஆகும். காலை மாலை கழற்ச்சிக் காயளவு சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப்பேதி, பித்த நோய், வெள்ளை நோய் தீரும். நீடித்து சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும்.
← Newer Newer Post
Older → Older Post