பித்த வெடிப்பு நீங்க- patha pitha vedippu tips in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, July 1, 2021

பித்த வெடிப்பு நீங்க- patha pitha vedippu tips in tamil

கால் பித்த வெடிப்புக்கு மருந்து
patha vedippu neenga tips in tamil


பாத பித்த வெடிப்புக்கு காரணங்கள்

கால நிலை மாற்றம் பனிக்காலத்தில் பாதத்தில் உள்ள கடுமையான தோல் பகுதி வரட்ச்சி அடைந்து வெடிப்புகள் உணாகும், உடலில் வாதம், பித்தம், கபம் சமசீர் நிலை கெட்டு பித்த நிலை பாதிப்பு அடைந்தாலும் பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகும். பாத அணிகலன்கள் ஓர் முக்கிய காரணமாகவும் உள்ளன ஒரே வடிவம் கொண்ட காலணிகளை தொடர்ந்து பயன்படுத்தாமல் அடிக்கடி மாற்றுவதாலும் குதிகாலில் வெடிப்பு உண்டாகுகின்றது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது

இரசாயானம் கலந்த நீர்களில் அதிக நேரம் நிற்க்கும் போதும், செடிகளுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தும் போதும் உரிய காலனிகளை பயன்படுத்தாமல் இருப்பதாலும் குதிகாலில் பனி வெடிப்புகள் போல பித்த வெடிப்புகள் தோன்றுகின்றன. 

பாத வெடிப்பு எதனால் வருகிறது

தொடர்ந்து பல மணி நேரம் தண்ணீரில் நிற்க்கும் போது குதி காலில் தோல் பகுதி நன்றாக ஊறி மாவு போன்று பெயர்ந்து வருகின்றன அந்த சமயத்தில் அதனை ஸ்கிரப்பர் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு அதனை சுத்த படுத்த தவறும் போது திரும்ப திரும்ப நீரில் ஊறி பின் காயும் பொழுது வெடித்து அந்த வெடிப்பில் அழுக்கு மற்றும் கிருமிகள் தொற்றி பித்த வெடிப்பாக மாறி வெடிப்பை ஏற்படுத்துகின்றன. 

பனிகாலங்களில் அதிகாலையில் எழுந்து வேலை செய்பவர்களுக்கும் இது போன்று பனி வெடிப்பு அல்லது பாதத்தில் பித்த வெடிப்புகள் உண்டாகின்றன. சிலர் பல மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே பணி புரிவதாலும் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு அதிக உடல் எடை காரணமாகவும் பாதத்தில் வெடிப்புகள் உண்டாகின்றன.

பித்த வெடிப்பு போக என்ன செய்ய வேண்டும்

முதலில் பாத வெடிப்பு வாரமல் இருக்க சில வழிகளை பின் பற்றினாலே போதுமானது. குழிக்கும் போது அகன்ற கல் அல்லது சொர சொரப்பான சிமெண்ட் காரையில் காலின் பாத பகுதியை உராசி தேய்க்கும் போது ஒரு விதமான மாவு போன்று பாதத்தில் உள்ள அழுக்கு மற்றும் தோல் கழன்று வந்து பாதத்தை மென்மையாக்கி பாத வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பாத வெடிப்பு குணமாக தேங்காய் எண்ணெய்

சிறிய பாத வெடிப்புகள் போக அவ்வப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து ஆரம் நிலை வெடிப்புகளை குணப்படுத்தி மேலும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கிறது

பாத வெடிப்பு நீங்க மஞ்சள் மருந்து

பெண்கள் கால் பாதத்தில் ஏற்படும் ஆரம்ப நிலை பாத வெடிப்பு நீங்க மஞ்சள் 5கிராம் மருதாணி இலை 5 கிரம் சேர்த்து நன்றாக அரைத்து குழித்து முடித்த பின் அல்லது இரவு படுக்கைக்கு முன் பூசிவர நல்ல பலனை கொடுக்கின்றது. பெண்களின் பாத வெடிப்பு நீங்க சிறந்த மருந்தாகும்

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

ஆண்/பெண் இருபாலரும் பயன்படுத்த கூடிய வகையில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் என்ற வகையில் அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடியதுமானது கிளிசரின் இது கால் பாடங்களில் தடவி வர பாத வெடிப்பு வராமலும் ஏற்க்கனவே இருப்பின் அவை மேலும் விரிவடையாமலும் கட்டுபடுத்தி வைக்கின்றது

குதிகால் வெடிப்புக்கு மருந்து

கால் பாதத்தி உள்ள பித்த வெடிப்பு அல்லது பனி வெடிப்புகளினால் அதிகப்படியான வலி உண்டாகும் நடக்கவோ அல்லது படுக்கவோ சிரமாக இருக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் வெடிப்புகளின் மீது முட்களை போல் சதைகள் கணப்படும் அதனை வெந்நீரில் காலை ஊறவைத்து முடிந்த வரை நன்றக்க கழிவி காய்ந்த பின் வெடிப்பின் மீது தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி விட வலி நிற்க்கும் இது தற்க்காலிக தீர்வு மட்டுமே.

பாத வெடிப்புக்கு சித்த மருத்துவம்

பித்த வெடிப்புகான களிம்பு

  1. விளக்கெண்ணை - 50 g
  2. நல்லெண்ணை - 10 g
  3. தேங்காய் எண்ணை - 10 g
  4. புன்னை எண்ணை - 10 g 
  5. பிரம்ம தண்டு வேர் - சிறிது
  6. கண்ட கத்திரி இலை - சிறிது
  7. கடுக்காய் தூள் - 1 Spoon
  8. மஞ்சள் தூள் - 1 Spoon
  9. தேன் மெழுகு- 10 g

பித்த வெடிப்புகான களிம்பு செய்முறை

    இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும். சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)
    டபுள் பாயில் முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றி பத்திர படுத்தவும்.

    பித்த வெடிப்புகான களிம்பு பயன்படுத்தும் முறை

      பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து பிறகு வெந்நீரில் கழுவி ஈரத்தன்மை காய்ந்த பின் வெடிப்புகள் மறையும் படி களிம்பை பயன்படுத்தவும். தொடர்ந்து இக்களிம்பை ஒரு வாரம் பாத வெடிப்புகளின் மீது தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும். இக் களிம்பை சேற்றுப் புண்ணுக்கும் உபயோகிக்கலாம்.
      ஒளசதம்
      Owshadham