பேரிக்காய் - perikkai
"பேரிக்காய் ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக அழைக்கப்படும்"
ஆசியா மற்றும் ஐரோப்பா
பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும்பத்தை
சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு,
மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும்
பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய்
பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
பேரிக்காய் மருத்துவ பயன்கள்
குழந்தைகள்
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது
குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும.
குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும.
வாய்ப்புண் குணமாக:
வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
உடல் உஷ்ணம்
பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், வைட்டமின் சி சத்து மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் எடை குறைய
பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உட்கொண்டு வந்தால், அவை உடல் எடை கணிசமாக குறைய உதவி புரியும்.
புற்று நோய்
பேரிக்காய்யில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் தவராமல் சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு
பேரிக்காய்யில் வைட்டமின் கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில்
உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
இதயம் வலுவடைய
அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் அன்னவர்கள் கூறியதாக அனஸ் அவர்கள் கூறுகிறார்கள்
அழகான குழந்தை பிறக்க
கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் அதிகம் சாபிட்டால். அதனால் குழந்தை
அழகாகப் பிறக்கும்.
வயிற்றுப் போக்கு
உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்.
மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும்
பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
எலும்பு மற்றும் தசை வளர்ச்சி
பேரிக்காய் எலும்பு,
தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.