நீரடிமுத்து மூலிகை மருத்துவ பயன் – NEERADI MUTHU BENIFINTS IN TAMIL
நீரடி முத்து விதை, காய், இலை, வேர், பட்டை, நிரடி முத்து மூலிகை, இவற்றின் பயன்கள். உடல் வெப்பதன்மையை கூட்டும், கிரந்தி நோய்களை குணப்படுத்தும்,நீரடி முத்து எண்ணெய், நிரடி முத்து செடி, நிரடி முத்து எண்ணெய், நிரெடி முத்து மூலிகை பயன், neeradi muthu oil uses, neeradi muthu images, neeradi muthu in English, neeradi muthu benefits, neeradi muthu ennai, neeradi muthu in tamil, neeradimuthu botanical name, chaulmoogra in tamil, chaulmoogra oil in tamil, chaulmoogra oil in tamil meaning, chaulmoogra tree in tamil, hydnocarpus oil in tamil, hydnocarpus wightiana in tamil, hydnocarpus pentandra tamil name hydnocarpus laurifolia in tamil, hydnocarpus laurifolia tamil name, chaulmoogra oil in tamil, chaulmoogra oil in tamil meaning.
![]() |
நீரடிமுத்து செடி |
நீரடிமுத்து வேறு பெயர்கள்
தமிழ் : நீரெட்டி முத்து, நீரடி, நீரடிமுத்து
தெலுங்கு : நிருடு
மலையாளம் : மரவெட்டி
சமஸ்கிருதம் : த்துவரக்ஹா
இந்தி : ஜங்கிலி பாதாம்
நீரடிமுத்து ஓர் மரவகையை சார்ந்த தாவரம் இனம். இதன் காய்கள் பார்பதற்க்கு சப்போட்ட காய் போல காணப்படும், தென்னிந்தியாவில் மலபார், திருவாங்கூர், இலங்கை முதலிய இடங்களில் காணப்படுகின்றன. நீரொட்டி முத்து என்ற பெயர் மறுவி நீரடி முத்து என்று அழைக்கபடுவதாக மொழி ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.
நீர்டி முத்து விதைகள் சிறுத்து மேல் தோலோடுகூடி சாம்பல் கலந்த கபில நிறமாயும் தைலப்பசை உடையதாக இருக்கும்.
![]() |
நீரடிமுத்து காய் |
விதையின் சுவை
கைப்பு, வெகுட்டல்
நீரடி முத்து விதை பயன்கள்
இதன் விதைகளை மருந்தாக சாப்பிட்ட நேர்ந்தால் உடலில் வெப்பம் உண்டாக்கும் ஆகவே இதற்க்கு ஏற்றவாறு அணுபானமாக குளிர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
உடல் எடையை கூட்டும் தன்மை உடையது
வெப்பம் உண்டாக்கி
புண்களின் மேல் உள்ள அழுக்கை அகற்ற உதவும்
தூக்குணிப்புழுக் கொல்லி – குடலில் உள்ள புழு மற்றும் புழுக்கள்
![]() |
நீரடி முத்து விதைகள் |
நீரடி முத்து விதை தைலம்
நீரடி முத்து விதைகளை சேகரித்து குழித்தைலமாக இறக்கி வைத்து கொண்டு தினம் நோயின் தன்மை அறிந்து தக்க அனுபானத்துடன் 5 முதல் 30 சொட்டு வரை சாப்பிட நீங்கா தோல் நோய், குட்டம், வாதரோகம், தீராச்சொறி, நமைச்சல் நீங்கும்.
தோல் நோய் நீங்க
இதன் பருப்பை தயிரில் ஊறவைத்து எழுமிச்சம் பழச்சாற்றில் அல்லது பழைய காடி நீரில் (புளித்த பழைய சோறு நீர்) குழைத்து உலர்ந்தபின் வராட்டிப் பொடியில் தேய்த்து குளித்துவரச் சொறி சிரங்கு தீரும்.
நீரடிமுத்து, கசகசா, கொப்பரை, காட்டுச்சீரகம், கருஞ்சீரகம், கார்போக வித்து, பிரமதண்டு வித்து இவைகளை சேர்த்து புளித்த நீர் விட்டு அரைத்து தேகத்தில் பூசி, தேகத்துக்கு தக்கபடி 3 அல்லது 4 மணி நேரம் சென்றபின் இளவெந்நீரில் குளிக்க சொறி, சிரங்கு, நமைச்சல், தவளைசொறி, படைகள் அனைத்தும் தீரும்.
![]() |
நீரடி முத்து காய்ந்த பின் |
நீரடிமுத்து எண்ணெய்
பாகப்படி இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடலில் பூசினாலும் உள்ளுக்கு கொடுத்தாலும் வாதகூட்டம், சிரங்கு, சொறி, பொருவியாதி, சூலை முதலியவைகள் குணமாகும்.
ஒளசதம்