துத்தி இலை மருத்துவ பயன்கள்
Thuthi ilai uses in Tamil
Abutilon indicum in tamil வட்ட துத்தி இலை பயன்கள், துத்தி கீரை பயன்கள், துத்தி செடி படம், துத்தி இலை எப்படி இருக்கும், துத்திப் பூ பயன், துத்தி இலை in english, துத்தி கீரை சமையல், துத்தி தலை, துத்தி தலை பயன், துத்தி meaning in english, துத்தி இலை படம், துத்தி இலை பொடி, துத்தி இலையின் பயன்கள், துத்தி இலையை பச்சையாக, சாப்பிடலாமா, துத்தி இலை மருத்துவம். thuthi ilai powder, vatta thuthi ilai uses, thuthi ilai images, vatta thuthi ilai in tamil, thuthi ilai for piles, thuthi ilai moolam, thuthi ilai benefits tamil, thuthi ilai powder benefits, thuthi ilai in malayalam name, thuthi ilai in payangal, thuthi ilai uses in tamil, thuthi ilai nattu maruthuvam, thuthi ilai tamil, thuthi ilai maruthuvam tamil, vata thuthi ilai
தமிழ் : துத்தி,
கக்கடி, கிக்கசி
தெலுங்கு : டுட்டுரு
பென்டா
மலையாளம் : துத்தி
இந்தி : கங்ஹீ
துத்தி தாவர அமைப்பு மற்றும் பயன்
இந்தியாவின் அனைத்து
பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரம் 5 அடி உயரம் வரை வளரும், மஞ்சள் நிற பூக்களை உடையது,
காய் வட்ட வடிவமாக வரிகளை உடையதக இருக்கும். இதன் இலைகள் தண்டின் மீது சுனை முட்கள்
பரவிகாணப்படும். துத்தி செடியின் இலை, பட்டை, காய், தண்டு, வேர் ஆகிய அனைத்து பகுதியுமே
மருத்துவ பயன் உடையதாக உள்ளது.
சிறந்த துத்தி செடி எது?
துத்தி செடிகளில் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள அதில் வட்ட வடிவமான கூர் முனைகளை உடைய இலைகளை கொண்ட துத்தியே கீழ்காணும் மருத்துவ பலன்களை கொடுக்க கூடியது.
துத்தி செடி எங்கு கிடைக்கும்?
துத்தி செடி தமிழகத்தின் குளிர்ச்சியான பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் சாலை ஓரங்கள், ஏரி, குலம், குட்டை, ஆறுகள், மலை அடிவாரங்களில் எளிதாக கிடைக்கின்றன.
துத்தி இலையை பச்சையாக, சாப்பிடலாமா?
துத்தியின் கொழுந்து இலையை பசையாக சாப்பிடலாம். சாப்பிட முடியாதவர்கள் துத்தி இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி பொடிசெய்து வைத்து சாப்பிடலாம்.துத்தி மருத்துவ பயன் உடைய பகுதிகள்.
இலை, பூ, வேர்
பட்டை, விதை மற்றும் காய்கள்.
துத்தி இலை பயன்கள்
துத்தி இலை இனிப்பு
சுவை உடையது, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தை தனிக்க கூடியது, உடலுக்கு
வலிமை தரக்கூடியது. மலச்சிக்கலை போக்கு மூல நோயை குணப்படுத்தும். சிறுநீரை பெருக்கி
விந்துவை குளிர்ச்சியடைய செய்து கொட்டி படுத்தும்.
துத்தி இலையை ஆமணுக்கு
எண்ணெய் விட்டு வதக்கி மூலரோகத்திற்க்கு ஒற்றடம் கொடுத்து கட்ட மூல கட்டிகள், கிருமியால் உண்டாகும் புண்கள் குணமாகும்.
துத்தி இலையை கொதிக்கின்ற
தண்ணீரில் போட்டு வேகவைத்து துணியை போட்டு தோய்த்து பிழிந்து ஒற்றடங்கொடுக்க வலிகள்
தீரும்.
துத்தி இலை அல்லது
துத்தி வேரி கசாயம் வைத்து வாய் கொப்பளிக்க பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் கிருமி
தாக்கம் புண்கள் குணமாகும்.
துத்தி இலையை எந்த
ரூபத்தில் உண்டாலும் வெபத்தினால் உண்டான சகல நோய்களும் தீரும்.
இலையின் சாறு
50 மில்லி நெய் 50 மில்லி சேர்த்து கொடுக்க பித்தத்தினால் உண்டான பேதி குணமாகும்.
துத்தி இலை கஷாயத்துடன்
பாலும் சக்கரையும் சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கல், ஆசன கடுப்பு மேகச்சூடு முதலியவைகள்
தீரும்.
துத்தி இலையுடன்
பருப்பு சேர்த்து சமைத்துண்ண மூல நோய்கள் குணமாகும்.
துத்தி இலை சாறுடன்
பச்சரிசி மாவை கூட்டி களிக்கிண்டி விப்புருதிக் கட்டிகளுக்கு வைத்து கட்ட பழுத்து உடையும்.
ஒளசதம்
Owshadham