இளமையாக இருக்க மூலிகை மருத்துவம் - ilamaiyaga iruka tips in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, June 22, 2019

இளமையாக இருக்க மூலிகை மருத்துவம் - ilamaiyaga iruka tips in tamil

முதுமையில் இளமை தரும் சஞ்சீவினி சூரணம்

இளமையாக இருப்பவர்கள் இம் மூலிகைகளை சேகரித்து தொடர்ந்து சாப்பிட்டு வர முதுமை நெருங்கவிட்டாம என்றும் இளமையாகவே இருக்கலாம், வயதானவர்களுக்கு இளமையை திரும்ப தரும் சித்த மருத்துவ முறை. ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம் நோய் நொடிகள் இன்றி இன்புற்று வாழ வழி செய்யும்.

சஞ்சீவினி சூரணம் தேவையான மூலிகை


  1. பூசணி விதை.      -   50 கிராம்
  2. சாலாமிசிரி            -   50 கிராம்
  3. சாரப்பருப்பு            -.  50 கிராம்
  4. முந்திரிப் பருப்பு    -.  50 கிராம்
  5. பாதாம் பருப்பு.       -.  50 கிராம்
  6. பிஸ்தா பருப்பு.       -.  50 கிராம்
  7. அக்ரூட் பருப்பு        -.  50 கிராம்
  8. வெள்ளரி விதை    -.  50 கிராம்
  9. கருப்பு உளுந்து      -.  50 கிராம்
  10. எள்ளு.                      -   50 கிராம்
  11. பார்லி                       -   50 கிராம்
  12. ஜவ்வரிசி                 -   50 கிராம்
  13. கொண்டைக்கடலை -  250 கிராம்

சஞ்சீவினி சூரணம் செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் வாங்கி நிழல் புடமாக காயவைத்து சுத்தம் செய்து தனி தனியே அரைத்து பின் ஒன்றாக கலந்து காற்று புகாமல் பத்திர படுத்தவும்.

சஞ்சீவினி சூரணம் உண்ணும் அளவு

இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் கலந்து குடித்து வரவும்.

சஞ்சீவினி பயன்கள் சூரணம் 

அறுபதில் இருபது வயதில் இளமையைப் பெறலாம்.ஆண்மைக் கோளாறுகள்,  நரம்புத் தளர்ச்சி ,  துரித ஸ்கலிதம் போன்ற குறைபாடுகள் நீங்கும் .உடல் பலவீனம் ,  மெலிந்த உடல் போன்றவர்களுக்கு இது அமிர்த சஞ்சீவினியாக நின்று செயல்படும் அற்புத மருந்து.