லிங்க செந்தூரம் செய்முறை - Linga chenduram seimurai - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, October 11, 2018

லிங்க செந்தூரம் செய்முறை - Linga chenduram seimurai

லிங்க செந்தூரம் செய்முறை

லிங்க செந்தூரம் தயாரிப்பு முறை, லிங்க செந்தூரம் மருத்துவ பயன், லிங்க செந்தூரம் சாப்பிடும் முறை, சாப்பிடும் அளவு, லிங்க செந்தூரம் பயன்கள், வைப்பு லிங்கம், லிங்க செந்தூரம் பயன்கள், லிங்க செந்தூரம் பயன், லிங்க செந்தூரம் செய்முறை, இலிங்கம், ஜாதிலிங்கம், ஜாதிலிங்க செந்தூரம் செய்முறை, பாசான மருந்து, பாசான மருந்து செந்தூரம் செய்முறை, லிங்க செந்தூரம் செய்வது எப்படி, ஆண்குறி விரைப்புக்கு லிங்க செந்தூரம், இலிங்கம் in english, லிங்க செந்தூரம் ஒளசதம், மூலிக மருத்துவம், பாசான மருத்துவம், ரசாயன மருத்துவம், இயற்க்கை பாசானம். linga chenduram, linga chenduram in tamil, linga chenduram uses in tamil, linga chenduram uses, linga chendooram uses in tamil, linga senthooram payankal in tamil, linga chenduram maruthuva payankal in tamil, linga chenduram medicine uses in tamil, linga chenduram seivathu eppadi, linga chenduram thayaripathu epppdi, linga chenduram sapitum murai, linga chenduram sapitun alavu, lingam sutthi murai, linga chenduram test seivathu eppadi, pudam vaithal, pudam miduthal, seelai man seithal, seelai man suttruthal, siddharkal valipadu, aan viruthikku marunthu, aan kuri viraippukku linga senthooram, lingam owshadham, linga chenduram owshadam

லிங்க செந்தூரம்

லிங்க செந்தூரம் செய்ய கட்டுப்பாடுகள்

  1. மூலிகைகளை கொண்டு மருந்து செய்வதில் அனுபவம் வேண்டும்.
  2. கல்வத்தில் இரண்டு மூன்று ஜாமம் தொடர்ந்து அரைக்கும் திறன் இருக்க வேண்டும்.
  3. மூலிகையில் சத்துரு மித்துரு தெரிந்து இருக்க வேண்டும்.
  4. புடம் வைக்க எருவின் அளவுகள் தெரிந்து இருக்க வேண்டும்.
  5. ஜாதிலிங்க பாசானத்திற்கு உரிய முறிப்பு மூலிகை தெரிந்து இருக்க வேண்டும்.
  6. பாசான மருந்துகளின் சுத்திமுறை தெரிந்து இருக்க வேண்டும்.
  7. பாசானம் செந்தூரம் ஆனதை உறுதி செய்ய தெரிந்து இருப்பது அவசியம்.
  8. மருந்து செய்முறையில் அனுபவம் இல்லாதவர்கள் சரியான மருத்துவரை அணுகி லிங்க செந்தூரத்தை வாங்கி கொள்ளுங்கள்.
  9. பாசானங்கள் விசதன்மை உடையவை முதல் முறையாக தனியாக செய்வது அவ்வளவு எளிதல்ல வீண் விரையம், விபரீதத்திற்கு ஆளாக வேண்டாம்.

லிங்க செந்தூரம் செய்ய தேவையானவைகள்

  1. ஜாதிலிங்கம் 50 கிராம்
  2. எலுமிச்சை பழ சாறு 40 மில்லி
  3. சின்ன வெங்காய சாறு - 325 மில்லி
  4. சீமை சாராயம் - 235 மில்லி
  5. நாட்டு கோழி முட்டை மஞ்சள் கரு - 40கிராம்
  6. முருங்கை பூ சாறு 100 மில்லி

லிங்க செந்தூரம் செய்முறை

லிங்க செந்தூரம் பல முறைகளில் செய்யலாம், லிங்க செந்தூரம் செய்ய மேற்கூறியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் சுயமாக செய்து கொள்ளுங்கள் இல்லை எனில் சுய நலம் இல்லாத தகுந்த ஆசானின் உதவியோடு செய்து பயன்படுத்துங்கள்.

சித்தர் வழிபாடு

பாசான மருந்து கையாலும் முன் உங்களுக்கு விருப்பமான சித்தரை மனதில் தியானித்து அவர்களது மூலமந்திரத்தை 108 முறை சொல்லி தொடங்குங்கள்  வேண்டுதல் உண்மையாக இருப்பின் சித்தர்கள் உங்களை முன் நின்று வழிநடத்துவார்கள் செந்தூரம் விரைவில் சித்தியாகும். 

லிங்கம் சுத்தி முறை

எலுமிச்சை சாறு 40 மில்லி எடுத்து சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதனுள் 50 கிராம் லிங்கத்தை போட்டு வைக்கவும். மூன்று நாள் கழித்து எடுத்தால் லிங்கம் சுத்தி ஆகி இருக்கும்.

வெங்காய சாற்றில் அரைத்தல்

சுத்தி செய்த ஜாதிலிங்கத்தை எடுத்து கல்வத்தில் வைத்து தூள் செய்து அதனுடன் 5 முதல் 10 மில்லி வெங்காய சாற்றை விட்டு அரைக்கவும். சாறு வற்றியதும் மீண்டும் 5 மில்லி விட்டு அரைக்கவும் இப்படியே 325 மில்லி சாறு முழுவதும் தீரும் வரை அரைத்து பின் வில்லை தட்டி வைக்கவும், இதற்கு ஓரிரு தினங்கள் ஆகும். 

சீமை சாராயத்தில் அரைத்தல்

சீமை சாராயம் என்பது அனைவருக்கும் தெரியும் சற்று விலை உயர்ந்த நல்லதாக 235 மில்லி வங்கி வில்லை தட்டி வைத்துள்ள லிங்கத்தில் துளி துளியாய் விட்டு அரைக்கவும். இப்படியே சீமை சாராயம் தீரும் வரை அரைக்கவும்.பின் வில்லை தட்டி வைக்கவும்.

கோழிமுட்டை கரு விட்டு அரைத்தல்

நாட்டு கோழி முட்டை தேவையான அளவு எடுத்து அதில் உள்ள வெண்கருவை நீக்கி மஞ்சள் கருவை எடுத்து அரைத்து வில்லையாக தட்டி வைத்துள்ள லிங்கதுடன் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும். கல்வம் இறுக பிடிக்கும் போது மீத முள்ள மஞ்சள் கருவை விட்டு அரைக்கவும். தீர்ந்த பின் வில்லை தட்டி வைத்து விடவும்.

முருங்கை பூ சாறு விட்டு அரைத்தல்

முருங்கை பூ சாறு 100 மில்லி எடுத்து வில்லை தட்டி வைத்துள்ள லிங்கதுடன் சிறிது சிறிதாக முன் செய்தபடியே சேர்த்து அரைக்கவும். சாறு முழுவது தீர்ந்து லிங்கம் வில்லை தட்டும் பதம் வரும்வரை அரைத்து எடுத்து சிறு சிறு வில்லையாக தட்டி வெய்யிலில் காய வைக்கவும்.

சீலைமண் செய்தல்

வில்லை தட்டி வைத்துள்ள லிங்கத்தை சிறிய மண் சட்டியில் போட்டு அதன் மேல் பகுதியை அதே அளவுடைய மண் சட்டியால் மூடி களிமண்ணால் வாயை அடைத்து பருத்தி துணியால் ஏழு சீலை மண் களிமண்ணால் செய்து வெய்யிலில் காயவைக்கவும்

புடமிடுதல்

இரவு நேரம் 25 எரு எடுத்து ஒன்றாக அடுக்கி விருப்பமான சித்தரை வணங்கி கற்பூரம் வைத்து பற்றவைத்து புகை முற்றிலும் அடங்கிய பின் சீலைமண் செய்த லிங்கத்தை நெருப்பின் நடுவில் வைக்கவும். அதன் மேல் சில எரு வைத்து மூடவும். 

லிங்க செந்தூரம் அரைத்தல்

அடுத்த நாள் சூடு ஆறிய பின் சீலை மண் வைத்ததை எடுத்து பிரித்து பார்த்தால் உள் இருக்கும் லிங்க வில்லை செந்தூர நிறத்தில் இருக்கும். லிங்க வில்லைகளை கல்வத்தில் இட்டு ஒரு ஜாமம் அரைத்து எடுத்து பத்திர படுத்தவும்.

லிங்க செந்தூரம் பரிசோதனை

அரைத்து வைத்துள்ள லிங்க செந்துரத்தை உங்களை வழி நடத்திய குருவிடம்  காட்டி ஜாதி லிங்கத்தில் உள்ள குற்றம் நீங்கி விட்டதா என்று பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம். அனுபவம் இருப்பவர்கள் பரிசோதித்து பயன்படுத்தவும்.

லிங்க செந்தூரம் சாப்பிடும் முறை

மேற் சொன்ன முறையை குற்றம் குறை இல்லாமல் செய்து முடித்தால் வீரியம் மிக்க லிங்க செந்தூரமாகி இருக்கும். நோயாளியின் உடல் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும்.  ஒரு அரிசி எடைக்கு குறைவாக தேன் அல்லது நெய்யில் காலையில் சாப்பிட நோய்கள் குணமாகும்.

லிங்க செந்தூரம் மருத்துவ பயன்

  1. ஆண்கள் தாம்பத்தியம் சார்ந்த அனைத்து நோய்களும் குணமாகும்.
  2. உடல் சுறு சுறுப்பை கொடுக்கும்.
  3. காய்சல் இருப்பவர்க்கு காயச்சல் கசாயத்துடன் அரை அரிசி எடை லிங்க செந்துரம் கலந்து கொடுக்க குணமாகும்.
  4. உடல் சோர்வை நீக்கும்.
  5. நரம்புகளை வலுவாக்கும் நரம்பு சார்ந்த நோய்கள் குணமாகும்.
  6. இரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும்.
  7. உடல் வலிமையை கொடுக்கும்
  8. மூலிகை சாற்றினை சத்ரு, மித்துரு அறிந்து மாற்றி லிங்க செந்துரம் செய்தால் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை லிங்க செந்தூரத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.

லிங்க செந்தூரம் குறிப்பு:-

லிங்க செந்தூரம் அரிசி எடைக்கு மேல் சாப்பிட கூட்டாது, அதிகமாக சாப்பிடும் பட்சத்தில் பக்க விளைவுகள் உண்டாக்கி மரணம் சம்பவிக்கும். பாசான மருந்துகளில் அனுபவம் உள்ள சித்த மருத்துவர்களின் துணையுடன் செய்து பார்க்க பரிந்துரை செய்கின்றோம்.

லிங்க செந்தூரம் செய்முறை ஒளசதம்
 Linga chenduram seimurai Owshadham