நாய்வேளை மருத்துவ குணம்
நாய்வேளை செடி, நாய்வேளை இலை, நாய்வேளைச் செடி, naaivelai, naaipoondu, naivelai, naaipoodu, mancahvelai, naaikaduku, kattu kaduku, kathil seel, kaathil sezh, kudal pulu, nataa pulu, cleome viscoza in tamil, Naaivelai in english, Naaivelai botanical name, herbs name, herbals name in tamil, molikai, naaivelai padam, naaivelai image, naaivelai picture
நாய்வேளை |
நாய்வேளை, நாய்பூண்டு, நாய்பூடு, மஞ்சவேளன், வேளக்கீரை, நாய்கடுகு, காட்டுக்கடுகு, என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது ஓர் செடி வகையை சார்ந்தது, சற்று பிசு பிசு தன்மையும், துர் நாற்றம் முடைய தாவரம். இதன் விதைகள் கடுகை போலவே உள்ளதால் நாய்கடுகு என்று கூறப்படுகிறது.
மருத்துவ பயனுடைய பகுதிகள்
நாய்வேளையின் விதைகள் மற்றும் இலை மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகிறது. இதன் இலைகள் நாடி நடைகளை சமப்படுத்தும் தன்மை கொண்டது மேலும் கட்டிகளை உடைக்க மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. நாய்வேளை இலைகள் சிறிது அதாவது 4 அல்லது 5 இலைகள் நாம் அன்றாடும் உணவாக பயன்படுத்தும் கீரையுடன் சேர்த்து சமைத்து உண்டு வர குடல் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுவை வெளியேற்றி பசியை தூண்டும் தன்மையுடையது. பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதித உதிர சிக்கலை சமன்படுத்துகிறது.
நாய்வேளை விதைகள்
குடலில் ஏற்ப்படும் வாயு அகற்றியாகவும், நுண் புழுக்கள் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மாந்தக் ஜுரம் குணமாக
நாய்வேளை இலை, தும்பை இலை, ஆடாதொடை, ஆதண்டை, கஞ்சாங்கோரை ஒவ் ஒன்றிலும் கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 5 கிராம் சிற்றரத்தையை சேர்த்து எல்லாவற்றையும் பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து, வடிகட்டி ஒரு வேளைக்கு சங்களவாக காலை, மதியம், மாலை மூன்று வேளையும் கொடுத்து வர மாந்தக் ஜுரம் குணமாகும்.
குடல் புழு வெளி வர
நாய்கடுகு பொடி தயார்செய்து 1/2 கிராம் அளவு நாட்டு சக்கரை சேர்த்து காலை, மாலை இருவேளையும், இரண்டு நாட்கள் மட்டும் கொடுத்து, மூன்றாவது நாள் விளகெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கள் அனைத்தும் வெளியேறும்.
காதில் சீழ் வடிதல்.
நாய்வேளை இலை சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வெள்ளை துணியால் சுத்தமாக வடித்து காதில் விட்டு வர சீழ் வடிதல் குணமாகும்.
Owshadham - ஒளசதம்