சைனஸ் என்ற பீனிசம் குணமாக தைலம்
சைனஸ் ( சைனுசைட்டிஸ் ) என்ற பீனிசம் நோய் குணமாக சித்த மருத்துவ முறையில் தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர பீனிசத்தால் உண்டான பதிப்புகளான தலைவலி முதலியவைகள் முற்றிலும் நீங்கி குணம் பெறலாம். இத்தைலம் சைனஸ் நோய்க்கு நிரந்தர தீர்வினை கொடுக்கும். இதைலம் செய்வது மிக எளிது.
சைனஸ் குணமாக தைலம்
தேவையான மூலிகைகள்
- ஆகாச கருடன் கிழங்கின் சாறு - 1 படி
- வெள்ளாட்டு பால் - 1 படி
- நல்லெண்ணை - 1 படி
- பூண்டு - 35 கிராம்
- வசம்பு - 35 கிராம்
- கஸ்தூரி மஞ்சள் - 35 கிராம்
- மிளகு - 35 கிராம்
பீனிச தைலம் செய்முறை
கொல்லன் கோவை கிழங்கின் சாறு, வெள்ளாட்டு பால், நல்லெண்ணை ஒன்று பட நன்றாக கலந்து இரும்பு கடாயில் ஊற்றி அதனுடன் பூண்டு, வசம்பு, கஸ்தூரி மஞ்சள், மிளகு மேற் குறிப்பிட்ட அளவு எடுத்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எரித்து தைலம் பதம் பார்த்து இறக்கி வைத்து சூடு ஆறிய பின் கண்ணாடி புட்டியில் அடைத்து வைத்து கொண்டு வாரம் மூன்று முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஒரு சில வாரங்களில் பீனிசம் எல்லா வகையான சைனஸ் குணமாகும்.
குணமாகும் நோய்கள்
ஓயாத தும்மள், பீனிச ரோகங்கள், சுவாச கோளாறுகள், சைனஸ் பாதிப்பால் உண்டான தலை வலி, கண் எரிச்சல் அனைத்து நீங்கி போகும்.
ஒளசதம்
Owshadham
- சைனஸ் குணமாக சித்த மருத்துவம்
- ஆகாச கருடன் மருத்துவ பயன்கள்
- தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை
- புடலங்காய் நன்மைகள்
- கணபதி ஹோமம் பலன்கள்