விருட்சங்களும் தெய்வீக சக்தியும் மருத்துவ பயன்களும்
துளசி விஷ்ணு
துளசி விஷ்ணு பகவானின் மனைவி ஆவார், விஷ்ணுவின் மீது அதிக பக்தியும், பாசமிம் உடையவள். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது.
மருத்துவகுணம்
துளசிக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வு அலைகள் பல நோய்களை குணமாக்கும். அத்துடன் சித்தர்கள் இம்மூலிகையை பல மருந்துகளில் முக்கிய மூலிகையாகவும், துணை மூலிகையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
சந்தன மரம் விஷ்ணு
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
மருத்துவகுணம்
சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.அத்திமரம் தத்தாத்திரேயர்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக சித்திக்கும்.மருத்துவகுணம்
அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
மாமரம் மகாலட்சுமி
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
மருத்துவ குணம்
மாவிலை கொழுந்தை எடுத்து, காயவெச்சு பொடிசெஞ்சு, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் கட்டுப்படும். கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.அரசமரம் பிரம்மா
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.மருத்துவ குணம்
அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். இதன் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும். அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும். அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.ஆலமரம் சிவன்
ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.மருத்துவ குணம்
நீரழிவு நோய்க்கு ஆலம்பட்சைச்சாறு – ஆலம்பட்டைக் கஷாயம் மருந்து. ஆலம்பழ ரசத்தில் கற்பூரத்தூள் கலந்து கண்நோய்க்கு (சுக்ரரோகம்) மருந்தாக சக்ரதத்தா பரிந்துரைத்துள்ளார். ஆலம் விழுதின் நுனி வாந்தியை நிறுத்தும். ஆலைப்போல், வேலைப்போல் ஆலம் விழுதினைப்போல் ஒப்பற்ற பல்லுக்கும் குச்சிக்கும் வேறுண்டோ. பல் உறுதிக்கு ஆலம் விழுதில் உள்ள மருத்துவப் பொருள் காரணமாகும்.மருதாணி லட்சுமி
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.மருத்துவ குணம்
மருதாணி இலையை கடுகு எண்ணெய்யில் கொதிக்க வைத்து குளிர்ந்த பின் உச்சந்தலையில் தேய்த்தால் அது விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மருதாணி எண்ணெய் வழுக்கை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் தீராத வெப்பத்தால் ஏற்படும் கடுமையான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை குணப்படுத்த மருதாணி மலர்களின் பேஸ்டை வினிகருடன் சேர்த்து தடவி வந்தால் தலைவலி குணமாகும்.புளிய மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.புளிய மரம் மருத்துவ பயன்
புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது. புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.மாதுளம் மரம் லட்சுமி
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.மாதுளை மரம் மருத்துவ பயன்
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் போட்டு அதின் உள்ளே சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
ருத்ராஷம் சிவன்
ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.ருத்ராட்சம் மருத்துவ பயன்கள்
ஷர்ப்பகந்தி பாம்பு
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.ஷர்ப்பகந்தி மருத்துவ பயன்
நெல்லி மரம் விஷ்ணு
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.வில்வமரம் சிவன்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.வேப்பமரம் சக்தி
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.கருவேல மரம் மாந்தீரிம்
கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன் படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.கருவேல மருத்துவ பயன்