அசோகு அல்லது அசோக மரம்
நீண்ட கூட்டிலைகலையும்
செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக நெடிந்துயர்ந்து வளரும் மரம். அழகு தரும் மரமாக
வீட்டுத் தோட்டங்களிலில் வளர்ப்பதுண்டு. தமிழ்நாட்டில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படுகின்றன.
பட்டை, பூ, ஆகியவை மருத்துவ பயனுடையவை.
சதை, நரம்பு ஆகியவற்றீன் வீக்கம் அகற்றியாகவும்,
கருப்பைக் குற்றங்களை நீக்கும் மருந்தாகவும் செயற்படும்.
100 கிராம் மரப்படட்டையைச் சிதைத்து 400 மி.லி நீரிலீட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு ஆகியவை தீரும்.
மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாகச்
சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 1 நாள்
ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி. அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் நாட்பட்ட பெரும்பாடும் தீரும். காரம், புளி நீங்கலாகச் சாப்பிடவும்.
அசோகு பூ, மாம்பருப்பு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில்
கொள்ளச் சீதப்பேதி, இரத்தப்பேதி தீரும்.
அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளை பழ ஓடு சமனளவு
பொடி செய்து 3 சிட்டிகை, காலை மாலை வெந்நீரில் கொள்ளக் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச்
சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100,120 நாள்கள் சாப்பிடப் பெண் மலடு தீரும்.
keywords : ashoku maram, asoka maram, acoku maram, asoka maram mruthuva payan poo, maa, marapattai அசோக மரம், long tree, long leafs
keywords : ashoku maram, asoka maram, acoku maram, asoka maram mruthuva payan poo, maa, marapattai அசோக மரம், long tree, long leafs