கல் உப்பு பயன்கள் - kal uppu benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Friday, September 23, 2022

கல் உப்பு பயன்கள் - kal uppu benefits in tamil

 கல் உப்பின் மகிமைகள்

கல் உப்பு பயன்கள் நன்மைகள் தீமைகள்


கல் உப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது

கல் உப்பு கடல் நீரை எடுத்து சிறு சிறு பாத்திகளில் நீரை தேக்கி அதன் பின் ஆவியாக்கல் முறையில் பிரித்து எடுக்க படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் உப்பில் மேற்பகுதியில் படியும் உப்பு மட்டுமே உணவுக்கு பயன்படுத்த படுகின்றது அடிபகுதியில் படியும் உப்பு தாவரவளச்சிக்கு உரமாக பயன்படுகிறது. இந்த கழிவு உப்பை சுத்திபடுத்தி மருந்தாக மாற்றும் போது அதிகப்படியான மருத்துவ குணம் உள்ளதாகவே தெரிகிறது.

கல் உப்பில் உள்ள சத்துக்கள் 

  1. குளேரைடு - 18.980 மி
  2. சல்போட் - 2.649 மி
  3. மக்னீசியம் - 1.262 மி
  4. பொட்டாசியம் - 0.380 மி
  5. பைகார்பனேட் - 0.140 மி
  6. புரோமைடு - 0.65 மி
  7. ப்ளோரைடு - 0.1 மி
  8. சிலிகேட் - 0.01 மி

கல் உப்பு பக்க விளைவுகள்

கல் உப்பில் விசத்தன்மை உடையதாக நம் முன்னோர்கள் எழுதிய நூல்களில் குறிப்பிடபட்டு உள்ளது. உப்பை சுத்தி செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் சிறு நீரக கோள்ளாறு, இரத்த அழுத்த நோய், இரத்ததில் அதிகப்படியான உப்பு சத்து, தோல் நோய்கள், இருதய பலகீனம் போன்றவை சுத்தி செய்யாத உப்பினால் ஏற்படக்கூடியதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுளது. உப்பின் நச்சுத்தன்மை அதிகப்படியான அரிக்கும் திறன் கொண்டது. இரண்டு கனமான இரும்பு பாத்திரத்தில் ஒன்றில் சுத்தி செய்யாத உப்பை கைபிடி அளவும் சுத்தி செய்த உப்பை ஓர் பாத்திரதிலும் போட்டு வைக்கவும் மூன்று மாதங்கள் சென்ற பின்பார்க்க சுத்தி செய்யாத உப்பிட்ட பாத்திரம் அரிக்கபட்டு இருக்கும். சுத்தி செய்த பாத்திரத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி வைத்தபடியே இருக்கும். இனி உப்பு பக்க விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உப்பை சுத்தம் செய்யும் முறை

கல் உப்பை வாங்கி வந்து அதை ஓர் பாத்திரத்தில் கொட்டி இளம்சூட்டில் வறுக்கவும் உப்பு படபடவென வெடிக்க செய்யும் இந்த சத்தம் அடங்கிய பின் குளிரவிட்டு எடுத்து பத்திர படுத்தி சமையலுக்கு பயன்படுத்தவும்

உயர்ந்த முறையில் கல் உப்பு சுத்தம் செய்தல்

தேவையான அளவு உப்பை எடுத்து 1:3 என்ற விகிதத்தில் சுத்தமான மழை நீர் அல்லது ஆற்று நீரில் கரைத்து மொத்தமான துணியால் வடிகட்டிய பின் மண் பாத்திரத்தில் ஊற்றி நீர் சுண்டும் வரை காய்ச்சும் போது அழுக்கு நுரைபோல மேலே வரும் இதனை வழித்து எடுத்துவிடவும். பின் நன்றாக ஆறிய பின் எடுத்து உப்பு ஜாடியில் பத்திர படுத்தி பயன்படுத்தும் போது எவ்வித பாதிப்பும் உண்டாக்காது. இவ்வாறு பண்டய காலங்களில் உணவிற்க்கும் மருத்துவத்திற்கும் உப்பு சுத்தம் செய்யப்படுள்ளதை சித்தர் நூல்களின் வழியாக அறிய முடிகின்றது. மோற்படி முறையில் உப்பை சுத்தம் செய்யும் போது உப்பில் சோர்கபட்ட அயோடின் நீக்கப்பட்டு சுத்தமான கலுப்பு கிடைக்கின்றது.

கல் உப்பின் நன்மைகள்

உப்பு உணவில் சேர்த்து உண்ணுவதால் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, நரம்பு மண்டலத்தின் உணர்வுகளை மூலைக்கு பகிர்ந்து அனுப்ப பயன்படுகிறது, தசை நார்களை சுருங்கி விரிவடைய உதவுகிறது, உடலில் உள்ள நீர் மற்றும் தாது உப்புகளை சமநிலையில் வைக்க உதவுகிறது. தண்ணீர் தாகத்தை தூண்டவும் அதை உணரவும் செய்கிறது. உமிழ் நீர் சுரப்பை தூண்டுகின்றது, 

கல் உப்பு மருத்துவ பயன்

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ உதவி இன்றி அவதி படும் ஒருவருக்கு ஒரு கல்லுப்பை வாயில் போட்டு அதன் நீரை சுவைக்க தற்காலிக பாதிப்பில் இருந்து பாதுகாத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்று காப்பாற்ற உதவுகிறது. மூச்சு பிடிப்பு, வயிற்று வலி ஏற்படும் காலத்தில் வெற்றிலையில் கல் உப்பை வைத்து சாப்பிட வலி குணமாகும். அடிபட்ட வீக்கங்கள் சுழுக்கு ஆகியவற்றிக்கு கல் உப்பை துணியில் பந்து போல கட்டி கரண்டியை சூடு செய்து அதில் உப்பை பந்தை சூடு வைத்து உபத்திரம் உள்ள இடத்தில் இதமாக வைத்து எடுக்க வலி குணமாகும்.

கண்திருஷ்டி போக்கும் கல்லுப்பு

கண்திருஷ்டியை போக்க கல்லுப்பை இடது கையில் வைத்து கொண்டு இடம் மூன்று வலம் மூன்று சுத்தி நெருப்பில் போட நீங்கும் இதற்க்கு பின்னால் உள்ள அறிவியலை கூர்ந்து நோக்குக. பில்லி சூணியம் செய்வினை போன்ற ஏவப்பட்ட நெகட்டிவ் எனர்ஜீ போக்க வீட்டின் உள்பகுதியில் நான்கு திசைகளிலும் வைக்க முன் சொன்னவை கட்டு பட்டு பாதிப்புகளில் இருந்து காக்க பயன்படும். வீட்டின் முற்றத்தில் கல்லுப்பை கட்டி வைக்க குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்கள் அழுவது சரியாகும். கல்லுப்பை நீரில் கரைத்து வீடு துடைக்க வீட்டில் உள்ள கிருமிகள் சாகும். பாசிடிவ் ஆற்றல் அதிகரிக்கும்.

கல் உப்பு குளியல் 

சிறிதளவு உப்பை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்க நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும், மன அழுத்தம் குறையும். தோல் அறிப்பு சிறு சிறு புணகள் குணமாகும்.  

கல் உப்பினால் உண்டாகும் பாதிப்புகள்

முறைப்படி சுத்தி செய்யாத கல் உப்பை உண்பதால் உடலில் பலவித பாதிப்புகளை உண்டாக்குகிறது. அதிபடியான உப்பை எடுத்து கொள்வதால் சிறுநீரிகம், இருதய, காமாலை, உடலில் உப்பு படிதல், இரத்தத்தில் உப்பு சத்தின் அளவு அதிகரித்தல், இரத்த அழுத்தம், அதி தாகம், நாவறட்ச்சி, சிறு கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகள் உண்டாக்கும். சிலருக்கு உடலில் எரிச்சல் உண்டாக்கும். இதில் இருந்து தற்காத்து கொள்ள முடிந்த அளவு தண்நீர் குடிப்பது நலம்.

கல் உப்பினால் செய்ப்படும் சித்த மருந்துகள்

கல் உப்பு பற்பம், கல் உப்பு சுண்ணம், கல் உப்பு செந்தூரம், இவற்றை கொண்டு பல கொடிய நோய்களை எளிதில் குணமாக்க முடியும், காய கற்பம், கடினமான மருந்துகளை எளிதாக செய்ய முடியும், உலோகங்களை அணு மாற்றம் செய்து மருந்து செய்யலாம், ரசமணிகள், உப்பு மணிகள் போன்றவை செய்ய முடியும் என்று சித்தர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒளசதம்