செந்தூரம் என்றால் என்ன
Chendooram endral enna
செந்தூரம் என்றால் என்ன
பாஷாணம் மற்றும் உலோகங்கள் மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்காளையும் உள்ளடக்கியதை அறிந்த சித்தர்கள் அதில் உள்ள சத்துக்களை வெளியேற விடாமல் நுண் துகள்களாக சிதற செய்து நம் உடல் ஏற்று கொள்ளும் படியான செந்தூர முறையை கண்டறிந்து செந்தூரம் செய்தனர். உடலில் தொற்றி கடுமையான நோயில் இருந்து விரைவாக விடுபடவும், உடல் காயகற்பமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.செந்தூரம் செய்வது எப்படி
முதலில் செந்தூரம் செய்ய வேண்டிய பாஷாணத்தையோ அல்லது உலோகத்தையோ எடுத்து அதற்குறிய உயர்ந்த சுத்தி முறையில் அதன் விஷத்தன்மையை முழுவதுமாக போக்க வேண்டும். அடுத்து அதனை செந்தூரமாக்கும் மூலிகை சாறுவிட்டு அரைத்து வில்லை தட்டி நன்றாக காயவைத்து அவ்வில்லையை ஓர் மண் சட்டியில் போட்டு மேல் மூடி சீலை மண் சுற்றி நன்றாக காயவைத்து அந்த பாஷாணத்திற்க்கோ அல்லது உலோகத்திற்கோ ஏற்ற எரு அடுக்கி புடமிட்டு ஆறிய பின் எடுக்க செந்தூரமாகி இருக்கும்.
செந்தூரம் எளிதில் செய்ய முடியுமா
செந்துராம் செய்ய ஒவ்வொரு பாஷாணத்திற்கும், உலோகத்திற்கும் உண்டான சுத்தி முறை, அரைப்பு காலம், அதற்குறிய மூலிகை, புடமிடும் எருவின் எண்ணிக்கை, சீலை மண் செய்தல் செய்வதில் அனுபவம் வேண்டும் அல்லது குரு வழிகாட்டுத்தல் வேண்டும். அவ்வாறு இன்றி வெறும் நூலை படித்துவிட்டு அனுபவம் இன்றி செய்தால் மருந்து கருகிபோகும், அல்லது செந்தூரம் ஆகமல் போகும் இப்படி பல முறைகளில் பொருள் இழப்பு உண்டாகும். முடிவில் செந்தூரத்தை பரிசோதித்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.செந்தூரம் வாழ்நாள் (எக்ஸ்பியரி டேட்)
எந்த வகையான செந்தூரமானாலும் கண்ணாடி புட்டியில் மட்டுமே போட்டு வைக்க வேண்டும். ஒரு முறை செய்த செந்தூரத்தின் வாழ்நாள் (அதாவது எக்ஸ்பியரி டேட்) 500 ஆண்டுகள் என சித்தர் நூல்களிலும், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் அனுபவத்திலும் கூறுகின்றனர்.செந்தூரங்களின் நிறம்
பெருவாரியான செந்தூரங்கள் சிவப்பு, கருஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு, இளமஞ்சள், வெண்மஞ்சள், முருங்கை பூ நிறம், என மஞ்சள் கலந்த வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை அடிப்படையாக கொண்டே இருக்கின்றன. எந்த உலோகம் அல்லது பாஷாணம் என்ன நிறத்தில் செந்தூரம் ஆகும் என சித்தர்கள் பூக்களை குறிப்பாக காட்டி பாடியுள்ளனர்.செந்தூரங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்.
மனித உடலில் பல உலோக சத்துக்களை உள் அடக்கியது சிலருக்கு அதிக குறைபாடு ஏற்படும் போது உடல் அதனை கடுமையான நோயாக வெளிப்படுத்துகிறது. இதனை மூலிகைகளால் விரைந்து குணமாக்க முடியாத நிலையில் நோயின் தன்மை அறிந்து அதற்குறிய செந்தூரங்கள அதற்குறிய அனுபாணத்தில் கொடுக்க நோய் விரைந்து குணமாகி சுகம் உண்டாகிறது.செந்தூரங்கம் வகைகள்
செந்துரங்களில் சித்தர்கள் கூறிய செந்தூர வகைகள், மருத்துவர்களின் பாரம்பரிய அனுபவமுறை என 100க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக செய்யப்பட்ட 10 வகையா செந்துரங்கள் இருந்தாலே மனிதன் நோய் இன்றி வாழ்ந்துவிடலாம்.
ஒளசதம்
Owshadham