மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் - mootu vali vaithiyam in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, June 26, 2021

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் - mootu vali vaithiyam in tamil

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்

முடக்கத்தான் தோசை செய்வது எப்படி

Mudakathan Dosai Seivathu Eppadi Tamil

மூட்டு வாதம் சார்ந்த குறைபாடுகளை சீர்செய்து ஆரோக்கியத்தை அளிக்கும் தோசை

தேவையான பொருட்கள்

  1. கம்பு                                  -  அரைக் கிலோ
  2. முடக்கத்தான் கீரை.   -  2 கைப்பிடி அளவு
  3. கொத்தமல்லி.              -  1 கைப்பிடி
  4. கறிவேப்பிலை.           -  1 கைப்பிடி
  5. சாம்பார் வெங்காயம். - 100 கிராம்
  6. வெந்தயம்.                     -   25 கிராம்
  7. உப்பு       -  தேவையான அளவு

முடக்கத்தான் தோசை செய்முறை

முதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து  இரண்டுமணி நேரம் ஊறவைக்க
வேண்டும். பின்பு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலைகளை சேர்த்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம் முடக்கத்தான் கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்து சாப்பிடவும்.

முடக்கத்தான் தோசை பயன்கள்

இந்தக் முடக்கத்தான் கம்பு தோசையை தினமும் ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் மற்றும் வாத வலிகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான தோசை.