தேன் வகைகள் - Types of honey in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Monday, April 8, 2019

தேன் வகைகள் - Types of honey in tamil

தேன் வகைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

தேன் வகைகள், தேனின் வகைகள், எந்த தேன் சுவையானது, தேன் கூடு வகைகள், அதிக மருத்துவ தன்மை கொண்ட தேன் எது, சுவை மிகுந்த தேன், types of honey in tamil, honey variety in tamil, honey types in tamil, honey bee variety in tamil, honey bee name in tamil, honey in tamil, then vakaikal, thenin suvai.
தேன் வகைகள், தேனின் வகைகள், எந்த தேன் சுவையானது, தேன் கூடு வகைகள், அதிக மருத்துவ தன்மை கொண்ட தேன் எது, சுவை மிகுந்த தேன், types of honey in tamil, honey variety in tamil, honey types in tamil, honey bee variety in tamil, honey bee name in tamil, honey in tamil, then vakaikal, thenin suvai.

தேனில் மொத்த ஐந்து வகையான உள்ளன்

  1. கொம்புத் தேன்
  2. மலைத் தேன்
  3. மரப் பொந்து தேன்
  4. மனைத் தேன் அல்லது கொசு தேன்
  5. புற்று தேன் அல்லது அடுக்கு தேன்

1. கொம்பு தேன்

மர கொம்புகளில் கட்டுகின்ற தேன் கூட்டில் இருந்து எடுக்கபடும் தேனிற்க்கு கொம்பு தேன் என்று பெயர். இதன் கூடு சிறியதாக இருக்கும். 500 மில்லிக்கு குறைவான அளவு தேன் இருக்கும். சுவை அதிகமானவை. எளிதில் யாரையும் தாக்காது.

கொம்பு தேன் மருத்துவ பயன்
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம், குடல் புண், உடலின் உட்புறத்தில் தோன்றும் ரணங்கள், பசியின்மை ஆகியவற்றை நீக்கும். மேலும் சித்த மருந்துகளுக்கு மிகச்சிறந்த அனுபான கொம்பு தேன்.

கொம்பு தேன் விலை
ஒரு லிட்டர்  சுத்தமான கொம்பு தேன் 1500 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது

2. மலைத் தேன்

உயரமான மரங்கள், அடுக்கு மாடி கட்டிடங்களில் இவ்வகை தேணீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன. மாலைத்தேன் ஈக்கள் அளவில் பெரியவை, ஒரு கூட்டில் இருந்து அதிக பட்சமாக 3 முதல் 6 லிட்டர் தேன் வரை எடுக்கலாம்.  சுவை குறைவு, மனிதர்கள், விலங்குகள் என அனைவரையும் தாக்கும்.
மலைத் தேன் மருத்துவ பயன்
ஆஸ்த்துமா, விக்கல், கண்நோய், சுரம், தேககடுப்பு, காய்ச்சல், பசியை தூண்டும், மேனி பொழிவு பெறும். சித்த மருந்துகளுக்கு அனுபான தேன்.
மலைத் தேன் விலை
ஒரு லிட்டர்  சுத்தமான மலைத் தேன் 700 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது.

3. மர பொந்து தேன்

மரங்களில் உள்ள பொந்துகளில் இவ்வகை தேனீக்கள் கூடு கட்டுகின்றன. ஈக்கள் கொம்பு தேன் ஈக்களை ஒத்தே கணப்படும், இதன் கூட்டில் இருந்து அதிக பட்ச்சமாக 2 லிட்டர் தேன் வரை எடுக்கலாம்.  ஓரளவு இனிப்பு சுவை உடையது,  உடனடியாக தாக்கும் குணம் கொண்டது.

மர பொந்து தேன் மருத்துவ பயன்
நல்ல ஜீரண சக்தியை தூண்டும், உடல் உஷ்ணத்தை அதிக படுத்தும், வாந்தி, சோர்வு, விக்கல், இருமல், போன்ற நோய்களை குணமாக்கும்.
மர பொந்து தேன் விலை
ஒரு லிட்டர்  சுத்தமான மலைத் தேன் 900 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது.

4. மனைத் தேன் அல்லது கொசு தேன்

வீடுகளின் சுவற்றில் உள்ள ச்சந்துகளை இதன் இருப்பிடமாக தேர்ந்து எடுத்து கூடுகள் கட்டுகின்றன. கொசு தேன் ஈக்கள் கொசுக்களின் அளவில் சற்று உருண்டையாக கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடுகள் சிறிய முட்டைகளை அடுக்கி வைத்தது போல் இருக்கும். 100 மில்லி வரை தேன் இருக்கும். புளிப்பு சுவை உடையது.
மனைத் தேன் அல்லது கொசு தேன்  மருத்துவ பயன்
கண் சார்ந்த அனைத்து நோய்களையும் குணமாக்கும், காசம், புண்கள், ஜீரண சக்தி ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் குணமாக்கும். கொசு தேன் குறிப்பாக மாந்திரீகத்தில் அதிகம் பயன் படுத்தபடுகிறது
கொசு தேன் விலை 
ஒரு லிட்டர்  சுத்தமான மண் மாசு அற்ற கொசு தேன் 3,700 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது.

5. புற்று தேன் அல்லது அடுக்கு தேன்

பாறைகளின் இடுக்குகள், வயல் வரப்புகளில் உள்ள பெரிய அளவிளான சந்து ஆகிய இடங்களில் இதன் கூடுகளை காணலாம். புற்று தேன் கூடுகள் பல அடுக்குகளாக இருக்கும் அதிக பட்சமாக 15 அடுக்கு கூடுகளை கொண்டதாக இருக்கும். பல அடுக்குகளாக கட்டுவதால் அடுக்கு தேன் என்றும் கூறுவார்கள். இதன் தேன் ஓரளவு இனிப்பு சுவை உடையாதாக இருக்கும்.
புற்று தேன் அல்லது அடுக்குதேன் மருத்துவ பயன்
ஜீரண சக்தியை தூண்டும், வாந்தி, விக்கல், இருமல், போன்ற நோய்களை குணமாக்கும். மற்றும் கபதோசங்களை நீக்கும்
புற்று தேன் விலை 
புற்று தேன் ஒரு லிட்டர் சுத்தமான தேன் 700 ரூபாய்க்கு விற்க்கபடுகிறது. இவ்வகை தேன் மட்டுமே அதிக அளவு சந்தைகளில் கிடைக்கின்றன.
ஒளசதம்
Owshadham
  1. கோரோசனை பயன்கள்
  2. உடும்பு கறி மருத்துவ பயன்
  3. ஓரிதழ் தாமரை பத்தியம்
  4. நான்கு வகை பெண்கள்
  5. வடுக பைரவர் காரிய சித்தி மந்திரம்