சங்கம்பழம் செடி |
சங்கம் பழம்
சங்கம் பழம் செடி பொதுவாக சங்கு இலை செடி, முட்சங்கஞ்செடி, மற்றும் இசங்கு என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது. சங்கம் பழம் செடியின் முட்கள் அதிக கூர்மனையானவைகள், அதிக வலியை ஏற்ப்படுத்தக் கூடியது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இயல்பாக காணப்படுகிறது. பழங்கள் வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். சங்கம் பழம் அளவில் மிகச் சிறியவை ஒரு பச்சை பட்டானியின் அளவுடன் வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் இலைகளின் முனைப்பகுதிகள் முட்களை போன்று கூர்மையனாது.
சங்கம் பழம் செடியின் அருகில் சென்றால் சிறிது மெல்லி நாற்றம் இருப்பதை உணர முடிகிறது செடி முழுவதும் அதிகப்படியான முட்கள் உடையவை. பழத்தை பறித்து நசுக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதன் சாறுபட்ட இடத்தில் எண்ணெய் போன்ற திறவம் படர்ந்து காணப்படும். சாற்றை தோல் பகுதில் தடவினால் சிறிது நேரத்தில் ஒருவித நமச்சலை ஏற்ப்படுத்தி அந்த இடத்தை தடிக்கச் செய்யும் தன்மை உடையது.
மருத்துவ தன்மை
- இலை
- வேர்
- பால்
- பழம்
மருத்துவ பயன்கள்
சங்கம் பழம் செடியின் இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்த்துமா, சர்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும்.
சங்கம் பழங்களை கொண்டு ஆண் குறியை பெரிதாக்க முடியும் என்ற மருத்துவ குறிப்பு ஒன்று உள்ளது.