தாமரை செடி வளர்ப்பு முறை || how to grow lotus at home in tamil: ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, February 14, 2018

தாமரை செடி வளர்ப்பு முறை || how to grow lotus at home in tamil

தாமரை செடி வளர்ப்பது எப்படி?

நேர்த்தியான தாமரை விதைகளை வாங்கி கொள்ளவும் விதையின் ஓடு கடினமாக இருப்பதால் முளை விடுவதில் தாமதம் ஆகும் சில சமயம் முளைக்காமலும் போகலாம் ஆகையால்,

தேவையான தாமரை விதைகள் ஒரு பாத்திரத்தில் போட்டால் மிதக்கும் விதைகள் முளைக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம் அவற்றை நீக்கி விட்டு தண்ணீரில் மூழ்கி இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

 ஓர் கனமான பொருளால் உள் இருக்கும் பருப்பு அடிபடாமல்  ஓட்டினை மட்டும் கீரல் விழுமாறு உடைத்து கொள்ளவும். அல்லது விதையின் அடிப்பகுதி அல்லது பக்கவாட்டில் உப்பு காகிதம் அல்லது சொர சொரபான தரையில் விதையின் ஓட்டிற்க்கு அடுத்துள்ள பருப்பின் வெண்மை நிறம் தெரியும் வரை உரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேய்க்கப்பட்ட தாமரை விதை
தயார் செய்த விதைகளை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஓர் நாள் கடும் வெய்யிலில் வைக்கவும் அல்லது சூடான நீர் ஊற்றி வைக்கலாம் கொதிக்கும் அளவிற்க்கு சூடான நீர் ஊற்ற கூடாது. இது கடினமான தாமரை விதையின் ஓட்டினை மென்மையாக்கும்.

தாமரை விதை முளைக்க ஆரம்பித்துள்ளது

அடுத்த நாள் நீரை வடிகட்டி சுத்தமான குடி நீர் ஊற்றி வைக்க 3 முதல் 6 நாட்களுக்குள் விதை முளைவிட்டிருக்கும் போது நீரை மாற்றி வைக்கவும் அதன் பின் முதல் இலை வளர மூன்று முதல் நான்கு வாரம் ஆகும்.

முதல் இலை வளர்ந்து வெளியே வருகிறது
முதல் இலை வளர்ந்து வந்து விரியும் முன் ஒரு தொட்டி அல்லது பக்கொட்டில் களிமண் போட்டு முளைத்த விதையை வேர், தண்டு அடிபடாமல் நட்டு தொட்டி முழுவதும் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.

முழுமையக வளர்ந்த வெண்தாமரை
முழுமையக வளர்ந்த வெண்தாமரை
அழகான மாடி தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள்
how to grow lotus at home from seeds in tamil, how to grow lotus root in tamil, growing lotus in pots in tamil, how to grow a lotus flower indoors in tamil, how to plant lotus tubers in tamil, lotus plant at home vastu in tamil, lotus plant care in tamil, தாமரை செடி வளர்ப்பு, வீட்டில் தாமரை செடி வளர்ப்பது எப்படி, தமரை விதைகள், விதை நேர்த்தி செய்வது எப்படி, தாமரை வகைகள், 

No comments:

Post a Comment