கவிழ்தும்பை தசை மற்றும் மூட்டு வலிகளை நீக்கும் - kavizhthumpai - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, December 25, 2014

கவிழ்தும்பை தசை மற்றும் மூட்டு வலிகளை நீக்கும் - kavizhthumpai

கவிழ்தும்பை மருத்துவ பயன் - kavizhthumbai maruthuva payan

கவிழ் தும்பை மருத்துவ பயன், கவிழ் தும்பை மூலிகை மருத்துவ பயன், கவிழ் தும்பை மருத்துவ குணம், கவிழ் தும்பை செடி, கவிழ் தும்பை புகைபடம், kavil thumbai in tamil, avil thumbai, kavil thumbai mooligai, kavizhthumpai, kavizh thumpai, kavilthumpai, kavil thumpai, udal vali, thasai vali, mootu vali, mootu savvu, savvu, savu, thanduvada vali, vali neekum mooligai, moochupidipu neekum mooliagai, moolikai, kavizhthumpai sedi, kavizhthumpai mooligai sedi, kavizhthumpai padam kavizhthumpai image picture .கவிழ் தும்பை

கவிழ் தும்பை தாவரவியல் பெயர்

"டிரைகோடெஸ்மா இன்டிகம்" என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், "கழுதை தும்பை" என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. 

கவிழ் தும்பை மருத்துவ பயன்

இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

உடல் வலி போக்கும் கவிழ் தும்பை மூலிகை

நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன.

கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலி நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை.

கவிழ் தும்பை பயன்படுத்தும் முறை

கவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.

வலி, வீக்கம் குணமாக

கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.

Owshadham
ஒளசதம்