தேன் சிட்டு குருவி - Honey bird - ஔசதம் - OWSHADHAM -->

Monday, June 15, 2015

தேன் சிட்டு குருவி - Honey bird

தேன் சிட்டு


   keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.


அறிவியல் பெயர் : Prodotiscus

ஆங்கில பெயர்கள் : Honeyguide, Honeybird, Brown-backed honeybird, Green-backed honeybird, Cassin's honeybird
 
                        இதன் தலைப் பகுதி சாம்பல் அல்லது சாம்பல் மற்றும் பச்சை நிறங்கள் சேர்ந்தும் காணப்படும். உடல் பகுதி வெண்மையான சாம்பல் நிறத்துடன் காணப்படும்,

   keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.

                       இந்தியாவின் அனைத்து காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இதற்குப் பிடித்தமான உணவு தேனீக்கள், குளவிகள், முட்டைப் புழுக்கள், சிறு சிறு பூச்சியினங்கள். தேன் சிட்டு குருவிகள், தேனீக்கள் தேன் கூட்டை அமைக்க பயன்படுத்தும் மெழுகினை இந்த குருவிகள் விரும்பி உண்ணுகின்றன. 

          தேன் சிட்டு குருவி மேலெழும்ப, கீழிறங்க, முன்னே செல்ல
  பின்னே செல்ல,ஒரே இடத்தில் பறந்திட என்று பல வேலைகளையும்  எளிமையாக செய்திட முடிகிறது. இதனை ஒரு குட்டி  ஹெலிகாப்டர் என்றே கூறலாம்.
                    தேன்சிட்டு குருவியால் தேன் கூடுகளை நேரடியாக உடைத்து அதில் உள்ள மெழுகினை சாப்பிடமுடியாததால் முதலில் கூடுகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து தேனை மட்டும் விரும்பி சாப்பிடும் கரடியின் உதவியை நாடுகின்றன. கரடி, தேன் கூட்டை கலைத்து தனக்கு தேவையானவற்றை சாப்பிட்டு சென்றபிறகு கூட்டில் மீதமுள்ள மெழுகு பகுதியை உண்டு மகிழ்கிறது. 

                   தேன்சிட்டு குருவியை தேன்னடை காட்டும் குருவியென்றும் கூறப்படுகிறது. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது.
       
       ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.


keywords : then sittu, thensittu, melugu, thenkoodu, then koodu, kuruvikal kuruvi, pravaikal. தேன்சிட்டு in english.