ருத்ராட்சம் அணியும் முறைகள் - ruthratcham malai benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, April 24, 2022

ருத்ராட்சம் அணியும் முறைகள் - ruthratcham malai benefits in tamil

ருத்ராட்சம் அணியும் முறைகள் - ruthratcham malai benefits in tamil

ருத்ராட்சம் அணிய உகந்த நாள்

வேத பாராயணம், வேதம் கற்றல், சிவநாம ஜெபம், சந்தியா வந்தனம், வேதம் ஓதுதல், சிவபூஜை, சிவ புராணம் வாசித்தல், ஓதுவதை கேட்டல், சிவ ஜெப தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசகம், சிவதலங்களை தரிசிக்கும் சமயம், புனித தீர்த்தங்களில் நீராடல், விரத காலம், இறந்தவர்கள் நினைவு நாளில் சீரார்த்தம் சடங்குகள் செய்யும் காலம்.  புனித விழா காலங்களில் ருத்திராக்ஷம் மணிகளை அணியலாம்.

ருத்ராட்சம் அணியக் கூடாத நாள்

குழந்தை பிறந்த தீட்டு, மரணமடைந்த தீட்டு, மாதவிலக்கு தீட்டு, குஷ்டம் போன்ற பெரு வியாதி காலம், தாம்பத்திய உறவு காலம், மலம் கழிக்கும் காலம், தூங்கும் சமயங்களில் ருத்திராக்ஷம் மணிகளை கழற்றி வைத்து விட வேண்டும்.  கழற்றிய மணியை அணியும்போது சிவநாமம் சொல்லி அணிய வேண்டும்.

வாரத்தின எந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு அணிய வேண்டிய ருத்திராட்சம் மணிகள் விவரம்:

கிழமைகிரகம்அதிதேவதைபிரதி தேவதை
அணிய
வேண்டிய
ருத்திராக்ஷ
மணிகள்
ஞாயிறுசூரியன்அக்னிருத்திரன்1-3-5-11
முக மணிகள்
திங்கள்சந்திரன்வருணன்துர்க்கை உமாதேவி2-5-7
முக மணிகள்
செவ்வாய்அங்காரகன்பூமிதேவிஷண்முகா3-7-6
முக மணிகள்
புதன்புதன்விஷ்ணுபுருசோத்தமர்4-10-21
முக மணிகள்
வியாழன்குருஇந்திரன்பிரம்மா4-5-8
முக மணிகள்
வெள்ளிசுக்கிரன்இந்திராணிஇந்திரன்6-7-8
முக மணிகள்
சனிசனிஸ்வரன்யமன்பிரம்மா7-3-4
முக மணிகள்

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம் மணிகள்

நட்சத்திரங்கள்கிரகம்ருத்திராக்ஷ மணிகள்
அசுவினி, மகம், மூலம்கேது9-2-3 முக மணிகள்
பரணி, பூரம், பூராடம்சுக்கிரன்6 முக மணிகள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன்1-3-11-12 முக மணிகள்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்சந்திரன்2-3 முக மணிகள்
மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய்    3 முக மணிகள்
திருவாதிரை, ஸ்வாதி, சதயம்ராகு8-5-11 முக மணிகள்
புனர்பூசம், விசாகம், புரட்டாதிகுரு5 முக மணிகள்
பூசம், அனுசம், உத்திரட்டாதிசனி7 முக மணிகள்
ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்4 முக மணிகள்

12 ராசிகளில்/லக்கினங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்ராட்ச மணிகள்


ராசி/லக்கனம்  ராசி அதிபதி  சாதக கிரகம் 
மேசம்செவ்வாய்செவ்/குரு3 முகம், 5 முக மணிகள்
ரிஷபம்சுக்கிரன்புதன்/சனி6, 4, 7 முக மணிகள்
மிதுனம்புதன்புத/சுக்4, 6 முக மணிகள்
கடகம்சந்திரன்சந்தி/செவ்3, 2 முக மணிகள்
சிம்மம்சூரியன்சூரி/செவ்1, 12, 3 முக மணிகள்
கன்னிபுதன்புதன்/சுக்கி4 - 6 முக மணிகள்
துலாம்சுக்கிரன்சுக்கி/சனி6 - 7 முக மணிகள்
விருச்சிகம்செவ்வாய்    குரு/சுக்கி3, 5, 7 முக மணிகள்
தனுசுகுருகுரு/சூரியன்  5, 1, 12 முக மணிகள்
மகரம்சனிசனி/சுக்கி7 - 6 முக மணிகள்
கும்பம்சனிசனி/சுக்கி7 - 6 முக மணிகள்
மீனம்குருகுரு/செவ்5 - 3 முக மணிகள்

ருத்ராட்ச மணிகளை பெண்களும் அணியலாம்


பெண்களின் தெய்வமாக விளங்கும் ஷ்ரீ ஆதிபராசக்தி தமுத்திலிருத்திராகளம் அணிந்திருப்பாள். திருவண்ணாமலை தல புராணத்தில் அருணாசல புராணம் என்ற அரிய நூலில் உண்ணாமுலை அம்மை காதில் ருத்திராக்ஷம் அணிந்து ஜெபம் செய்ததாக புராணம் கூறுகிறது. திருவானை காவல் ஷ்ரீ அகிளாண்டேஸ்வரி அட்சமணி அணிந்த தாகவும், அகிளாண்டநாயகி ஆராதணைபடலம் பாடல் 68ல் குறிப்பிட்டுள்ளது. பிரம்மக்கரியம், கிரஹஸ்தாஸ்ரமம். வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற ஆஸ்ரம வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் ருத்திராக்ஷ மணி அணிந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் சிறிய ருத்திராக்ஷ மணி மாலைகளையும். வயது முதிர்ந்தவர்கள் பெரிய ருத்திராக்ஷ மணிகளையும் அணியலாம்.

தெய்வங்களும் ருத்ராட்ச மணி மாலை அணிந்தது பற்றிய குறிப்புகள்:

1. ஷ்ரீ விநாயகி பெருமான்திரும்புவைாயிற் புராணத்தில் விநாயகர் சருக்கம் என்ற படலத்தில் நான்காம் பாடலில் குறிப்பிட்டுள்ளது.
2. சிவபெருமான்திருவாரூர் தியாகராசலீலையின் மூன்றாம் பகுதியில் மானிட ரூபம் எடுத்து ருத்திராக்ஷம் அணிந்தார் என குறிப்பிட்டுள்ளது.
3. சக்திதிருவானை காவல் கோவில்புராணம். அகிலாண்டநாயகி ஆராதனை பாடல் (படலம்) 68வது பாடலில் குறிப்பிட்டுள்ளது.
4. ஷ்ரீ பிரம்மாவிளத்தொட்டிப் புராணத்தில் பிரம்மன் பூஜை படலத்தில் பாடல் 14ல் குறிப்பிட்டுள்ளது.
5. ஷ்ரீ விஷ்ணுதிருவானைக் காவல் புராணம் திருமால்விழி பாடு படலம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
6. ஷ்ரீ சூரிய பகவான்திருபுனல்வாயில் புராணத்தில் தினபதி சுருக்கம் பாடல் 5ல் குறிப்பிட்டுள்ளது.
7. ஷ்ரீ சந்திரன்திருபுனல்வாயில் புராணத்தில் உடுபதி சுருக்கம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
8. ஷ்ரீ பைரவர்விளத்தொட்டி புராணத்தில் வயிரவ பூஜைப்படலம் பாடல் 26ல் குறிப்பிட்டுள்ளது.
9. அஸ்காரகன்திருப்புனல்வாயிலின் புராணம் பார்மகண் என்ற சொல்லில் செவிவியம் கிரகத்தை குறித்து ருத்திராக்ஷம் அணிந்ததாக உள்ளது.
10. யமன்திருபுனல்வாயின் புராணம் ஜியமச்சுருக்கம் படலத்தில் பாடல் 66ல் குறிப்புள்ளது.
11. வாயுதிருப்பைஞ்ஞீலி ஸ்தல புராணத்தில் வாயு பூஜை மகிமை படலத்தில் பாடல் 7ல் குறிப்புள்ளது.
12. ஷ்ரீ ராமர்தின் வான் மியுர் புராணம் இராமன் வரம்பெறும் படலம் பாடல் 19ல் குறிப்பிட்டுள்ளது.

ருத்ராட்ச மாலை ஜபம் செய்யும் திசைகளின் பலன்கள்

திசைகள்பலன்கள்
1. இந்திர திசை (கிழக்கு)தினம் அனைத்தும் வகிய மனரும்
2. அக்கினி திசை (தென் கிழக்கு)பலவகை நோய் விட்டு விலகும்
3. யமன் திசை (தெற்கு)துன்பங்கள், தீமைகள் வரும்
4. திரு ருதி திசை (தென் மேற்கு)கொடிய வறுமை வாங்கும்
5. வருண திசை (மேற்கு)சேர்த்து வைத்த செல்வம் அழியும்
6. வாயு திசை (வட மேற்கு)பேய், பில்லி, தனியம் நம்மை விட்டு ஓடும்
7. குபேர திசை (வடக்கு)பொன், பொருள் கல்விபேறு சகல சம்பத்துகளும் சேரும்
8. ஈசான திசை (வட கிழக்கு)   முக்தி பேறு அடையணம்.

தெய்வங்களில் சிறந்தவர்

புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு கிரஹங்களில் சிறந்தவர் நாயகி. பசுவில் சிறந்தது காமதேனு ருதிசையில் சிறந்தது உச்சை சிரவம் யானையில் சிறந்தது ஐராவதம் விருஷங்களில் சிறந்தது கற்பக விருக்ஷம் புற்களில் சிறந்தது அருகம்புல் வேதங்களில் சிறந்தது ரிக்வேதம் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மத்திரம். மருந்துகளில் சிறந்தது அமிர்தம் உருவாகங்களில் சிறந்தது தஸ்தம். நபரத்தின்ஙகளில் சிறந்தது வைரம் அதுபோல மணி மாலைகளில் சிறந்தது ருத்திராக்ஷ மணி மாலையாகும்