இறால் மீன் மருத்துவ பயன் - Prawns fish benefits in tamil
சித்தர் பாடல்
வாதமொடு மந்தமுறு மாறப் பொருமன்மிகுஞ்
சீதம் விளையுந் தினவுண்டா-மாதே
யுதிர மிகப்பெருகு மோங்குமிறா லூண்டா
லெதிரிலங்க ராங்கிசமா மெண்.
இறால் மீன் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்
- அக்னி மந்தம்
- வியிற்று உப்பிசம்
- சீதளம்,
- தினவு,
- ரத்த மாமிச தாது இவைகள் உண்டாகும்.
இறால் மீன் சாப்பிட வேண்டிய முறை
கடலில் இருந்து கிடைக்க கூடிய இறால் மீன்களை பாகப்படி சமைத்து உண்ண மேற் கூறிய சித்தர் பாடலில் கூறப்பட்ட குணங்கள் உண்டாகும் மாற்றம் இல்லை. ஒரு வேளை உண்ண விரும்பினால் பெரிய இறால் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட வேண்டாம் இதில் மிகுதியான மேற்கூறிய பாதிப்பு உண்டாம். ஆகையால் பொடி இறால் மீன்களை வாங்கி உபயோக படுத்தினால் அதிக கெடுதலை உண்டாக்காது. குறிப்பாக மருந்து உண்ணும் காலங்களில் இறால் மீன்களை கண்டிப்பாக தவிர்க வேண்டும். இல்லை யெனில் ஒளசதம் பயன் தராது.
ஒளசதம்
Owshadham
- இளமையாக இருக்க மூலிகை மருத்துவம்
- ஊர் பன்றி கறி மருத்துவ பயன்
- மருத்துவம் பார்க்க உகந்த நாள்
- உடும்பு கறி மருத்துவ பயன்
- கழுதை பால் பயன்கள்