கேன்சர் நோய் அறிகுறிகள் மற்றும் வகைகள்
Cancer In Tamil - புற்று நோய்
கேன்சர் நோய் வகைகள்
புற்றுநோயில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றை 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- கார்சினோமா
- சார்க்கோமா
- மைலோமா
- லிம்ப்போமா
- லுக்கீமியா
கார்சினோமா கேன்சர் நோய் வகை
கார்சினோமா என்பது உடலின் தடிமனான உறுப்புகளில் ஏற்படும் புற்று நோய். உதாரணமாக நுரையீரல், குடல், கருப்பை, கனையம், தோல் இவைகளில் கேன்சர் நோய் உண்டாவதை கார்சினோமா வகயை சார்ந்தாது.
கார்சினோமா கேன்சர் அறிகுறிகள்
மேற்க்கூறிய உறுப்புகளில் ஏற்படும் தடிமானான உருண்டை வடிவ கட்டி(கள்), ஆறா புண்(கள்) நாற்பட்ட புண், வலி, வீக்கம், இரத்த கசிவு, காய்ச்சல் உடல் எடை குறைதல், பசியின்னமை, தூக்கம் இன்மை போன்றவைகள் அறிகுறிகளாக காணப்படுகின்றன.சார்க்கோமா கேன்சர் வகை
சார்க்கோமா கேன்சர் அறிகுறிகள்
எலும்பு பகுதியில் வலி, உடலை இருக்கி பிழிவது போன்ற கடுமையான வலி, கட்டிகள், புண், ஆறா புண்கள், பசியின்மை, தூக்கம் இன்மை.மைலோமா கேன்சர் வகை
மைலோமா புற்று நோய் செல்கள் எலும்பு மஜ்ஜைகளிலும், பிளாஸ்மாவிலும் ( இரத்ததின் நீர்ம பகுதி ) ஏற்படுவது
லிம்ப்போமா புற்று நோய் செல்கள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலமான நினனீர் மற்றும் மண்ணீரலையும் பாதிக்க கூடியது.
சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்களை தோற்றுவிக்கும் எலும்பு மஜ்ஜை சார்ந்த அணுக்களை பாதித்து ஏற்படக்கூடியது. இதனையே இரத்த புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த புற்று நேய்களில் 137 வகைகள் உள்ளன.
மைலோமா கேன்சர் அறிகுறிகள்
தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி மிகுந்த காய்ச்சல், சோர்வு, இரத்த கசிவு, பசியின்மை, தூக்கம் இன்மை போன்றவைகள் காணப்படலாம்.லிம்ப்போமா கேன்சர் நோய் வகை
லிம்ப்போமா கேன்சர் அறிகுறி
கட்டுபடுத்த முடியாத காய்ச்சல், மயக்கம், இரத்த கசிவு, மிகுந்த தலை வலி, இரத்த சோகை, தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி, வீக்கம், மூச்சு விட சிரமம் போன்றவை உண்டாக்கும்.லுக்கீமியா கேன்சர் நோய் வகை
லுக்கீமியா கேன்சர் அறிகுறி
இரத்தத்தில் அதிகப்படியான வெள்ளை அணுக்கள் உண்டாகும், கட்டுபடுத்த முடியாத காய்ச்சல், மயக்கம், இரத்த கசிவு, மிகுந்த தலை வலி, இரத்த சோகை, தாங்கமுடியாத எலும்பு மற்றும் உடல் வலி, வீக்கம், மூச்சு விட சிரமம், மேற்க்கண்ட கேன்சர் நோய்களில் மிகவும் மோசமாக பாதிக்க கூடியாது குறிப்பாக குழந்தைகளை தாக்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.குறிப்பு:-
மேற்கண்ட அனைத்து கேன்சர் நோய்காண அறிகுறிகள் இரண்டாம் நிலையை அடைந்த பின்னரே வெளிப்படுகின்றன. மற்றும் மேற்கூறிய அறிகுறிகள் வேறு சில சாதாரணமாக குணப்படுத்தக் கூடிய நோய்களிலும் வரக்கூடும் ஆகவே தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் தங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையே சிறந்தது.