கோவில் அருகில் குடியிருந்தால் என்னென்ன பலன்கள்
இன்று நகரங்களில் கோவில் அருகில் பெரும்பாலான வீடுகள் உள்ள கோவிலின் நேர் எதிரே கூட கட்ட தொடங்கி விட்டனர். சரி அப்படி கட்டபடும் வீடுகளில் குடியேரினால் நல்ல பலன்கள் என்ன, தீய பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
வீட்டு பலன்
- வீடு/வீட்டு மனைக்கு வலப்பக்கம் கோவில் இருந்தால் பொருள் சேதம் உண்டாகும்.
- இடப்பக்கம் கோவில் இருந்தால் துக்கமும் துயரமும் உண்டாகும்
- எதிர்பக்கம் இருந்தால் முன்னேற்றத்துக்கும் முட்டு கட்டையாகும்
- பின்பக்கம் இருந்தால் சேர்த்து வைத்த செல்வம், சிற்ப்புகள் அழிந்து போகும்.
- கோவில் கோபுரத்தின் நிழல், அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது
- கோவிலுக்கும் வீடு/மனைக்கும் குறைந்தது 100 அடி தூரம் இடைவெளி இருந்தால் மேற்கண்ட பாதிப்பில் இருந்து விலகலாம்.
- பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன்/கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது
- சிவன் கோவில் இருந்தால் உங்களது வீட்டிற்கு எந்த பகுதியில் வருகிறது என்பதை பொருத்துதான் உங்களது வீட்டை அமைக்க வேண்டும்.