தென்னை மரம் - இயற்கை உரம் - Thennai maram iyarkai uram - ஔசதம் - OWSHADHAM -->

Monday, October 12, 2015

தென்னை மரம் - இயற்கை உரம் - Thennai maram iyarkai uram


தென்னை மரத்திற்க்கு தென்னை மட்டை  இயற்கை உரம்


தென்னை மரத்தில் இருந்து விழும் காய்ந்த மடைகள், பன்னாடை, தேங்காய் நார்கள் ஆகியவற்றை நாம் பயன் படாத பொருளாக கருதி தூக்கி எரிந்து விடுவோம் அல்லது தீயிட்டு எரித்து விடுவோம். ஆனால், இதனை வீணாக்காமல் அத்தென்னை மரத்திற்கே இயற்கை உரமாகவும், மரத்திற்க்கு பாய்ச்சும் நீர் விரைவில் ஆவியாகமல் தடுக்கவும் பயன் படுத்தலாம்.

தென்னை மரத்திற்க்கு தென்னை மட்டை  இயற்கை உரம்   நீர் ஆவியாதல் தடுத்தல் களைகள் தென்னை மட்டை இயற்க்கை உரம் தேங்காய் மட்டைகள் தென்னை மரம் நட வேண்டிய அளவுகள் தென்னை மரம் நடவு செய்ய குழி தோண்ட வேண்டிய அளவு

காய்ந்த தென்னை மட்டையின் கனமான அடிப்பகுதியை வெட்டி நீக்கி விட்டு படத்தில் காட்டியபடி தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வாய்காலில் நீள வாக்கிலும் மரத்தை சுற்றியும் போடவும். அவ்வாறு அமைக்கும் போது வாய்காலின் மேற்ப்பரப்பு மண் தெரியாதவாறு தென்னை மட்டை கொண்டு மிக நெருக்கமாக மூடிவிட வேண்டும்.

மட்டைகளை அடிக்கிய பின் முதல் முறையாக நீர் பாய்ச்சும் போது வாய்காலில் தண்ணீர் நிரம்ப சற்று நேரம் பிடிக்கும். பின்னர் தென்னை மட்டைகள் நீரை தன்னுள் உறிவதால் எடை அதிகமாகி வாய்க்கலில் அமிழ்ந்துவிடும். அடுத்த முறை தண்ணீர் பாய்ச்சும் போது விரைவாக நீர் வாய்காலில் நிரைவதை காணலாம்.

தென்னை மட்டை அமைப்பதனால் என்னென்ன பயன்கள்? இது எவ்வாறு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது?

தென்னை மட்டை பயன்கள் 


நீர் ஆவியாதல் தடுத்தல்


மரத்திற்க்கு நீர் பாய்ச்சிய பிறகு மட்டை நீரில் ஊறிவிடுகிறது இதனால் சூரிய ஒளியின் வெப்ப தாக்கத்தை கட்டுபடுத்தி வாய்கால் மண்ணில் உள்ள ஈரப்பதம் ஆவியாகமல் தடுத்து மரத்திற்க்கு தெடர்ந்து நீர் கிடைக்க ஏதுவாக இருக்கிறது. சூரிய ஒளி வாய்கால் மற்றும் மரத்தை சுற்றிலும் நெருங்க முடியாமல் போவதால் மண் வெப்பமாகி சுமார் ஒரு அடி ஆளத்தில் உள்ள தென்னை மரத்தின் வேர் பகுதி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.

மாறாக  மட்டையின் அடிபகுதியில் உள்ள மண் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் மாறு வைத்து கொள்கிறது. இங்கு மட்டைகள் ஒரு அரண் போல் நின்று மரத்தின் வேரை பாதுகாக்கிறது.மேலும் இரவில் கிடைக்கும் ஈரமான காற்று மற்றும் பனி நீரில் மட்டைகள் எளிதில் குளிர்ச்சியாகி பகலில் ஏற்ப்படும் வெப்ப தாக்கத்தை நீக்கிகொள்கிறது.

சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஈரப்பதம் தாக்கு பிடிக்கும் இது வாய்க்கால் மற்றும் மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட மட்டையின் நெருக்கத்தை பொருத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்க.

களைகள்

வாய்க்காலில் சூரிய ஒளி நேரடியாக சென்றடையாததால் புல், பூண்டு, செடிகள் போன்ற களைகள் வளர்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இரசயாண களைகொள்ளிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

தென்னை மட்டை இயற்க்கை உரம்


வாய்காலில் தென்னை மரத்தை சுற்றி போடப்பட்ட தென்னை மட்டைகள் தொடர் வெய்யில் மற்றும் குளிர்ச்சியின் காரணமாக சிறிது சிறிதாக் வெளிர் நிரத்திற்க்கு மாறி மக்கத் தொடங்கி மட்டையில் உள்ள சோவை பகுதி உதிர்ந்து மண்ணில் கலந்து இயற்க்கை உரமாக தென்னை மரத்திற்க்கு கிடைக்கிறது தென்ன மட்டையில் அனைத்து சத்துப் பொருட்களும் அதிக அளவு காணப்படுகிறது.

உதிர்ந்த சோவை பகுதி போக மீத முள்ள தண்டுப் பகுதியை எடுத்து விடலாம் அல்லது அப்படியேவும் விட்டு விடலாம். மட்டையின் அடிப்பகுதியில் தொடர் ஈரப்பதம் இருப்பதால் கரையண் புற்று வைக்கலாம் இது மட்டையை தின்று வெளியிடும் எச்சமும் நல்ல இயற்கை உரமே. கரையான்கள் தென்னை மரத்தின் மீது கூடு வைக்காமல் பார்த்து கொண்டால் போதுமானது.

 தேங்காய் மட்டைகள்

தேங்காய் மட்டை,  தேங்காய் நார்கள் அல்லது தேங்காய் உரிகாய் மட்டைகள் இவை அனைத்துமே ஒன்றுதான் இடத்திற்க்கு இடம் பேச்சு வலக்கில் மாறுபடலாம். இது தேங்காய் உறிக்கும் போது கிடைக்கும் நார் போன்ற பகுதியே.
தேங்காய் மட்டை


தேங்காய் மட்டை,  தேங்காய் நார்கள் அல்லது தேங்காய் உரிகாய் மட்டைகள் இவை அனைத்துமே ஒன்றுதான் இடத்திற்க்கு இடம் பேச்சு வலக்கில் மாறுபடலாம். இது தேங்காய் உறிக்கும் போது கிடைக்கும் நார் போன்ற பகுதியே.

தென்னை மரத்தை சுற்றிலும் சுமார் ஒரு அடி ஆளம் மரத்தின் வேர் வெட்டு படாமல் மண் தோண்டி ஆற்று மணல் பரப்பி அதன் மீது தேங்காய் மட்டைகளை போட்டு மூடி விட வேண்டும். இந்த அமைப்பும் தென்னை மட்டையை போலவே நீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக வேர் பகுதிக்கு அளித்து வரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மரம் செழிப்புடன் இருக்கும்.

இவ்வித மட்டை அமைப்புகள் மிகவும் வரட்ச்சியான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். மிதமான நீர் வசதி கொண்ட தென்னை மரத் தோப்பிற்கு நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

தென்னை மரம் நட வேண்டிய அளவுகள்


ஒரே ஒரு வரிசை தென்னை மரம் நடவு செய்ய மரத்திற்க்கு மரம் சுமார் 18 முதல் 22 அடிவரை இடைவெளி விட்டு வைக்கலாம்.

தென்னை மர தோப்பிற்க்கு நடவு செய்ய மரத்திற்க்கு மரம் சுமார் 22முதல் 25 அடிவரை இடைவெளி விட்டு வைக்கலாம். தோப்பாக மரம் நடவு செய்யும் போது மரம் வளர்ந்த பின் பக்கத்து மரத்தின் மட்டைகள் அதன் அருகிள் உள்ள மரத்தின் மட்டைகளை ஒன்றோடு ஒன்று மோதாத வரு அமைத்தல் நன்று. இவ்வாறு அமைக்கும் போது மரம் ஒரே சீராக நேராக வளரும் அதிக அளவு காய்பிடிக்கும்.

தென்னை மரம் நடவு செய்ய குழி தோண்ட வேண்டிய அளவு


 தென்னை மரம் நடவு செய்ய குழி சுமார் ஒரு அடி அகலம் ஒன்றை அடி ஆலாம் எடுப்பது சிறந்தது. குழி தோண்டிய பின் வெய்யில் காலமாக இருப்பின் நான்கு நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும். குளிர்ந்த மழை காலமாக இருப்பின் அன்றே நடவு செய்யலாம்.


Thennai maram mattai uram, thennai mattai iyarkai uram, thenkaai mattai iyarkai uram, neer aaviyal thadukkum murai, thennai maram nata vendai alavukal. thennan thoppu maram, thennai maram kuzhi edukka vendia alavukal. thenna mattaiyn payankal, kalaikal, kalaigal, manal, dry coconut palm fertilizer in tamil, palm fertilizer, palm organic fertilizer, organic uram, coconut dry palm fertilizer. homemade coconut tree fertilizer, fertilizer in tamil uram, uram in english fertilizer. coconut tree waste palm fertilizer, coconut shell fertilizer. coconut tree forming ideas, thennai mara olai, thenna mara sovai, thennai keetru, thennang keetru, thennang kutchi, thennai stick, maadi veetu thottam, madi veetu thotam, maadi vittu thotam, sedikalukku iyarkai uram, sediku uram, sedi kalukku iyarkai uram

தென்னை சோவை, தென்னை கீற்று, தென்னை மர பலகை, தென்னை ஓலை, ஓளை, ஓழை, மாடி வீட்டு தோட்டம், செடிக்கு உரம், செடிகளுக்கு இயற்க்கை உரம். பூந்தொட்டி செடிகளுக்கு உரம், பூ செடிகளுக்கு உரம்,