கோழி முட்டை அடை வைக்கும் இன்குபேட்டர் தயாரிக்கும் முறை
இன்குபேட்டர் சய்வது எப்படி, கோழி இன்குபேட்டர், முட்டை பொறிக்கும் கருவி, குஞ்சு பொரிக்கும் இயந்திரம், கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம், முட்டை இன்குபேட்டர், கோழி குஞ்சு பொரித்தல், கோழி குஞ்சு முட்டை பொறிக்கும் கருவி, கோழி குஞ்சு பொரிக்க வைப்பது எப்படி, கோழி இங்குபேட்டர். மின்சார குஞ்சு பொரிப்பான், கோழி குஞ்சு பொரித்தல், கோழி குஞ்சு உணவு, கோழி குஞ்சு கிடைக்கும் இடம், கோழி குஞ்சுகள், கோழி குஞ்சு ஆங்கிலத்தில், கோழி குஞ்சு தீவனம், கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம், கோழி குஞ்சு, கோழி குஞ்சு பொரித்தல், கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம், கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம் விலை, கோழி குஞ்சு பொரிப்பான், கோழி குஞ்சு பொரிக்கும் முறை englishhow to make an incubator for chicken eggs in tamil,how to make egg incubator pdf in tamil, cheap incubator for chicken eggs in tamil, how to make an incubator for bird eggs in tamil, homemade incubator thermostat in tamil, how to hatch eggs at home without incubator in tamil, how to make an incubator for duck eggs in tamil, how to hatch a bird egg without an incubator in tamil. incubator machine seivathu eppadi, koli kunchu poripan, kozhi incubator, kolikunchi incubator, kolikunsu poripan, koli kunchu porikkum iyanthiram, thayarikkum murai, electric incubator in tamil
கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொரித்து வெளிவர மிதமான தட்ப வெப்ப நிலை மிக முக்கியமனது ஆகும். அதாவது முட்டையை சுற்றிலும் 99.5 டிகிரி முதல் 100.4 டிகிரி வெப்ப நிலை வறட்சியாக இல்லாமல் ஈரப்பதத்துடன் தேவைபடுகிறது. எளிய முறையில் இன்குபேட்டர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.கோழி குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் |
இன்குபேட்டர் தயாரிக்க தேவையானவை
- தெர்மாகோல் ஐஸ் பெட்டி மூடியுடன்
- கம்பி வலை
- மர ரீப்பர் தப்பைகள்
- மின்விளக்கு 10 வாட்ஸ்
- பல்ப் ஹோல்டர்
- பிளக்
- இணைக்க தேவையான ஒயர்
- ஒரு பிளாஸ்டிக் கப்
- தண்ணீர்
- தெர்மோ மீட்டர்
இன்குபேட்டர் செய்முறை
உங்களிடம் உள்ள தெர்மோகோல் பெட்டியின் உட்புற அளவிற்க்கு ஏற்றவாறு மர ரீப்பர் பலகை அல்லது பி.வி.சி பைப்பை கொண்டு சதுரமாக படத்தில் உள்ளவாறு தயார் செய்து அதன் ஒரு பகுதிக்கு மெல்லிய கம்பியால் பின்னப்பட்ட வலையை வைத்து தைத்து கொள்ளவும்.
இந்த சதுர வடிவ கட்டையை பெட்டியின் உட்புறம் எளிதாக பொருந்தும்படியாக இருக்க வேண்டும்.
முட்டை வைக்கும் நிறுத்தம் |
மின் விளக்கு அவரவர் தேவைக்கு ஏற்ப்ப பொருத்திக் கொள்ளலாம், சதாரண பல்ப் பயன்படுத்தினால் 10 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை பயன்படுத்தலாம். 40 வாட்ஸ்க்கு மேல் பயன் படுத்தினால் வெப்ப அளவு அதிகமாக இருக்கும் ஆகையால் 10 வாட்ஸ் போதும், சி.எப் மின் விளக்கை பயன்படுத்தினால் 10 வாட்ஸ் போதுமானது. பெட்டியின் உட்புறபகுதியின் வெப்ப நிலை 100.4 டிகிரிக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
மின் விளக்கு பொருத்தப்பட பெட்டி |
காற்று துளை |
தெர்மாகோல் பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் பின்னர் சதுர வடிவ வலை பொருத்தபட்ட கட்டையை வைக்கவும் அதன் மீது முட்டைகளை மின் விளக்கில் இருந்து இடைவெளி விட்டு வைக்கவும். பெட்டியின் பக்க வாட்டில் ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலையை காட்டும் கருவி வாங்கி பொருத்தி கொள்ளவும். பிறகு மின் விளக்கை பொருத்தவும்.
பெட்டியின் மேற்புற மூடியில் சதுரமாக வெட்டி கண்ணாடி அல்லது பாலித்தீன் பேப்பர் வைத்து ஒட்டிவிடவும்.
கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம் |
வெப்பம், ஈரப்பதம் கண்டறியும் கருவி
டெம்ப்ரேச்சர் கருவிகள் நிறைய வகைகள் கிடைக்கின்றன, அதில் ஈரப்பதம், வெப்ப நிலை இரண்டையும் காட்டும் கருவி அவரவர் வசதிக்கேற்ப்ப வாங்கி பொருத்திக் கொள்ளவும்.
அடைவைக்கும் முறை
வெப்ப நிலை கண்காணிப்பு
முட்டைகளை மேற்கூறிய முறைபடி வைத்தபின் மின் விளக்கை
தொடர்ந்து எரிய விடவேண்டும். வெப்ப நிலை அதாவது 100.4 டிகிரிக்கு மிகாமல் அதன் அளவை தாண்டும் போது மின்விளக்கை அனைத்து விடவேண்டும். வெப்ப நிலை குறையும் போது எரிய விடவும்.
வெப்ப நிலை அதிகரிக்க, கூடுதலான வாட்ஸ் மின்விளக்கை பயன்படுத்தலாம், ஈரப்பதம் அதிகரிக்க தண்ணீர் உற்றி வைக்கும் பாத்திரம் மேலும் அகலபடுத்தினால் போதும்.
கோழி குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள்.
ஈரப்பதம் கண்காணிப்பு
மின் விளக்கிற்க்கு நேர் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் பெட்டியின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஆவிஆகி ஈரப்பதத்தை சமன் செய்யும். ஈரப்பத்தின் அளவு 50% முதல் 55% அளவிற்க்குள் இருக்கவேண்டும்.முட்டை பராமரிப்பு
பொரிப்பானில் வைக்கப்பட்ட முட்டைகளை நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று அல்லது 4 முறை திருப்பி வைக்க வேண்டும். இதற்க்கு முட்டையின் மேல் மற்றும் அடிப்பகுதியில் x மற்றும் 0 போன்ற குறியீடுகள் ஏதாவது போட்டு, திருப்பி வைப்பதை உறுதி செய்யது கொள்ளலாம். முட்டைகளை திப்பும் போது கைகள் சுத்தமாகவும், ஆயில், அழுக்கு இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முட்டையை திருப்பும்போது மெதுவாக திருப்ப வேண்டும்.கோழி குஞ்சு பொரிக்கும் காலம்
கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தில் உள்ள முட்டைகளை தொடர்ந்து 18 நாட்கள் திருப்பி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாலை, மதியம், இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்யலாம். 20ம் நாள் முதல் 22 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும் கலாம். இச்சமயத்தில் ஈரப்பதம் 70% முதல் 75% சதவிகிதமாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.வெப்ப நிலை அதிகரிக்க, கூடுதலான வாட்ஸ் மின்விளக்கை பயன்படுத்தலாம், ஈரப்பதம் அதிகரிக்க தண்ணீர் உற்றி வைக்கும் பாத்திரம் மேலும் அகலபடுத்தினால் போதும்.
எச்சரிக்கை மின்சாரத்தை கையாலும் போது அனுபவம் உடையவர்களை அருகில் வைத்து கொண்டுதான் செய்யவேண்டும்.
கோழி குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள்.
- விசம் தீண்டப்பட்ட மாட்டுக்கு கை வைத்தியம்
- தெய்வீக மரங்கள்
- தேங்காய் எண்ணெய் சோப் தயாரிப்பது எப்படி
- ஏர்கூலர் செய்வது எப்படி