பைரவர் வழிபாட்டு முறை மற்றும் சிறப்பான பலன்கள்
பைரவர் வழிபாட்டின் சிறப்பான பலன்கள்
- தொழில் மேன்மை அடையும்
- செல்வம் பெருகும்
- கடன் தொல்லை தீர
- பில்லி சூனியம் விலக
- கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
- இழந்த பொருளை திரும்பப் பெற
- பூமி லாபம் கிட்டும்
- வல், பில்லி, சூனியம் விலகும்
- சர்ப்ப தோஷங்கள் நீங்கும்
- திருமணம் தடை நீங்கும்
- எண்ணிய காரியம் நிறைவேறும்
- எதிரி பயம் நீக்கும்.
- சர்ப்ப தோஷங்கள் நீங்கும்
- பதவி உயர்வும் கிட்டும், வழக்குகளில் வெற்றி
நல்ல மக்கள் செல்வம்
தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
சர்ப்ப தோஷங்கள் நீங்க
பதவி உயர்வும் கிட்டும், வழக்குகளில் வெற்றி
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம்,
சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால்
உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம்
கிட்டும். சனி பிரதோஷம் அன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால்
வழக்குகளில் வெற்றி கிட்டும்.
தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் பற்றி அறிய
பைரவர் வழிபாடு நாளும் அதற்காண பலனும்
திங்கட்கிழமை - பைரவர் வழிபாடு
திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.ராசி
கடக ராசியில் பிறந்தவர்கள் திங்கட்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்செவ்வாய்க்கிழமை - பைரவர் வழிபாடு
மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.ராசி
விருச்சிகம், மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்புதன்கிழமை - பைரவர் வழிபாடு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும். ரியல் எஸ்டேட், விட்டு மனை வாங்கி விற்ப்பவர்களுக்கு மற்றும் மண் சம்பந்தபட்ட தொழில் செய்பவர்களுக்கு புதன்கிழமை பைரவர் வழிபாட்டிற்க்கு ஏற்ற நாள்.ராசி
மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்.வியாழக்கிழமை - பைரவர் வழிபாடு
ஏவல், பில்லி, சூனியம், மை, மந்திரம் உள்ளதா என்ற பயம் உள்ளவர்கள் வியாழக்கிழமை நாளில் வீட்டிலே அல்லது பைரவர் கோவிலுக்கோ சென்று விளக்கேற்றி பைரவரை வழிபட்டு வந்தால் தீய சக்திகள் சூல்திருந்தால் அதில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் காண்பார்கள்.ராசி
தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்.வெள்ளிக்கிழமை - பைரவர் வழிபாடு
வெள்ளிக்கிழமை அந்தி சாயும் நேரத்தில், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவர்க்கு வில்வ இலை அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும்.ராசி
ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்.சனிக்கிழமை - பைரவர் வழிபாடு
ஆட்டி படைத்து, அள்ளி கொடுக்கும் சனி பகவானுக்கு குருவாக திகழ்பவர் பைரவர் ஆவார். சனிக்கிழமை அன்று இவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி விலகி நல்லவை நடக்கும்.ராசி
மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்.எதிரிகள், கண் திருஷ்டி, எம பயம் அகல
9 மிளகை ஒரு சிகப்பு துணியில் கட்டி அகல் விளக்கில் போட்டு நெய் நிரப்பி சனிக்கிழமை தோறும் தீபம் ஏற்றினால் எதிரிகள் அழிவர், கண் திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. சாவு பயம் நீங்கும்.ஞாயிற்றுக்கிழமை
கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.ராசி
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாடு செய்து வர நற்பலன்களை தரும்.திருமண தடை நீங்க
ஞாயிற்றுக்கிழமை நாள் அன்று ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி
வழிபட்டால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
கால பைரவர், சனி பகவாக்கு குரு ஆன புராண கதை
பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும் பிரதானமாகக் கூறப்படுவது எட்டு வடிவங்கள். அந்த எண் வடிவங்களுள் ஒரு பைரவரிடமிருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக-அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர். சாயாதேவிக்கும் சூரியனுக்கு பிறந்தவர் சனீஸ்வரன். சனீஸ்வரனை அவரது அண்ணன் எம தர்மன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்டார் சனிபகவான் தனது வேதனையை தனது அன்னை சாயாதேவியிடம் தெரிவித்தார் சனிபகவான். உடனே தேவி, மகனே! சஞ்சலப்படாதே! காலபைரவரை நோக்கி தவமிரு. அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றாள். அன்னை சொன்னபடியே சனிபகவான் காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய கால பைரவர், சனி பகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனிபகவான் நவகிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றதும் கால பைரவரால்தான். பைரவரை சனிபகவானின் குருநாதர் என்பர்.பைரவர் வாகனம்
நாய் பைரவர் வாகனம் என்று நம் புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் பைரவர் வாகனமான நாய்க்கு துன்பம் ஏதும் விளைவிக்காமல் உணவளித்து வாருங்கள். உமது வாழ்க்கை மேன்மை பெரும்.
பைரவர் மந்திரம்
“ஓம் பைரவாய நமஹ”
நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடி நிற்கும்.
பைரவர் காயத்திரி மந்திரம்
“ஓம் ஸ்ரீம் க்லிம் ஸ்ரீ கால பைரவாய நமஹ”
தினமும் வீட்டில் பைரவர் படத்திற்க்கு முன்பாக பஞ்ச தீபம் ஏற்றி முதலில் உம் குல தெய்வத்தை வணங்கிய பின் மனதை ஒன்று படுத்தி மேற்கூறிய பைரவர் காயத்திரி மந்திரத்தை 108 முறை உச்சாடனம் செய்து வர கைமேல் பலன் பெறுக வாழ்த்துகிறோம்.
பைரவர்க்கு பிடித்தமான உணவு
பைரவர்க்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை,
வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட
உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து
வழிபாடு செய்வது மிகவும் நல்லது.