அல்லி - ஆம்பல் - குமுதம் மூலிகை மருத்துவ பயன்
மூலிகையின் பெயர்கள்
ஆம்பல், குமுதம், நீலாம்பல், அம்புஜா, அல்லி, குவளை மேலும் பல வித பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆம்பல் நீர் நிலைகளில் வாழும் தாவரம், இதில் மூன்று நிற மலர்கள் காணப்படுகிறது. இது அல்லி குடுப்பத்தை சார்ந்த தாவரமாகும்.
- வெள்ளை நிற ஆம்பல் மலர்கள்
- நீல நிற ஆம்பல் - நீலாம்பல் மலர்கள்
- இளஞ்சிவப்பு நிற ஆம்பல் மலர்கள்
வெள்ளை நிற ஆம்பல் மலர் |
நீல நிற ஆம்பல் - நீலாம்பல் மலர் |
இளஞ்சிவப்பு நிற ஆம்பல் மலர் |
நீலாம்பல் மருத்துவ பயன்கள்
முழுத் தாவரமும் கல்லீரல் கோளாறுகளை நீக்க ஆயூர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலை, வேர் மற்றும் மலர்கள் இரத்த சம்மந்தப் பட்ட கோளாறுகள், மலட்டு தன்மை இதய பிரச்சனைகள், வயிற்றுக்கடுப்பு, உமிழ்வு காய்ச்சல், அஜீரணம், இலேபனம், டையூரிடிக், போதை, பாலுணர்வு போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இருதயத்திற்க்கு வலுசேர்க்கவும் செய்கிறது.
நீலாம்பல் மலர் மருத்துவ பயன்கள்
மயக்கம், பித்தம், வாந்தி, இதய் நோய்கள், சிறு நீர்கழிக்கும் போது ஏற்ப்படும் வலி, காய்ச்சலுடன் கூடிய பேதி, நீரிழிவு நோய், புழு தொற்று, தோல் எரிச்சல், இருதய படபடப்பு, மூளை சம்மந்தப்பட்ட நோய்கள், போன்றவற்றிற்க்கு அருமருந்தாக ஆயூர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நீலாம்பல் மலர் காசாயம்.
நீலாம்பல் மலரை பொடி செய்து காசாயம் தாயாரித்து குடிக்க கொடுத்து வர, எந்த வித அறிகுறியும் இன்றி திடிரென ஏற்ப்படும் இருதய படப்டப்பு ( palpitation of the heart ) குணமாகும்.
நீலாம்பல் செடியின் இலைகள்
தோல் பகுதிகளில் ஏற்ப்படும் எரிச்சலான பகுதிகளில் குளிர்ச்சியை உண்டாக்க இதன் இலைகள் பயன்படுத்தப் படுகிறது.
நீலாம்பல் இலைக்காம்பு
இலைகாம்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையுடன், உப்பு, நீலாம்பல் விதைப் பொடி, வெண்ணை, சிறிது தேன் சேர்த்து சாப்பிட பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உதிர போக்கு, பிரசவகாலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு ஆகியவை கட்டுப்படும்.
நீலாம்பல் செடியின் கிழங்கு
செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூலம் ஆகிய நோய்களுக்கு நீலாம்பல் செடியின் கிழங்கு எடுத்து பொடி செய்து கொடுத்து வர வடு தெரியாமல் குணமாகும்.
நீலாம்பல் செடியின் வேர்
சிறு நீரை தூண்டுகிறது, நீரிழிவு நோய், வெள்ளை படுதல், சிறு நீர் குழயில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
நீலாம்பல் செடியின் தண்டு
தண்டு பகுதியை சிறு சிறு துண்டுகலாக வெட்டி சமைத்து சாப்பிடலாம்.
இரைப்பை மற்றும் மாதவிடாய் கோளாறுகளை நீக்குகிறது.
இரைப்பை மற்றும் மாதவிடாய் கோளாறுகளை நீக்குகிறது.