விரியன் கடி புண்ணுக்கு பாவட்டை மூலிகை
விரியன் பாம்பு |
விரியன் பாம்பு அதிக விச தன்மையுடைவைகள், இப் பாம்பு கடித்து பின் அதன் விசம் உடலில் இருந்து இறங்க வைத்தியம் செய்தாலும், விரியன் பாம்பின் கடி வாய் புண் அவ்வளவு எளிதில் குணமாவதில்லை. அப்படியே விடின் கடிவாய் புண் அழுகி அப்பகுதியையே நீக்கும் சூழ் நிலை உருவாகலாம். அவ்வளவு எளிதில் குணமடைவதில்லை. "விதி மூண்டால் தான் விரியன் பாம்பு கடிக்கும் என்று கூறுவார்கள்" இவ்வரிகள் மூலம் அதன் விச தன்மையை உணரலாம்
இவ்வளவு வலிமையான விசம் கொண்ட விரியன் பாம்பு கடி புண்ணுக்கு வைத்தி நூல் ஒன்றில் மிக எளிமையான மூலிகை கூறப்பட்டுள்ளது.
" பாத்தியமாம்பா வட்டயிலை வேகவைத்து
பண்பானவென்னீரால் கழுவிப்போட்டு
வெற்றியாம் அவ்விலையை வைத்துக்கட்ட
விரியன துகடிவீங்கி வெடித்தபுண்கள்
சுத்தமாய் ஆறிவிடும் சொன்னேன் சொன்னேன்
சூராதி சூரனென்ற அவுஷதங்கேள்
நித்தியமும் ராச்சொல்லான் பலமேவாங்கி
நெடியபோய்ச் சுரைய்ருகில் நின்றுபாரே "
விரின் கட்டு வீங்கி வெடித்த புண்ணுக்குப் பாவட்டை இலை போட்டுத் தண்ணீர் காய்ச்சி அந்த இரணத்தை கழுவி விட்டு ஈரமற் துணியினால் ஒத்திடம் செய்து பாவட்டை இலையை வத்க்கி வைத்துக் கட்டவும். இப்படி 5 - 6 வேளைகள் செய்ய, கட்ட விரியன் கடித்த புண் ஆறிவிடும். குருவை அரிசிச் சோறும் மிளகு நீரும் கூட்டவும்.
பாவட்டை இலை |
சான்று :- விச வைத்தி நூலை பார்க்க