சகல விசத்திற்கும் அகோரருத்திராஞ்சனம்
பாம்பு, தேள், பூரான், எலி போன்ற அனைத்து விசத்திற்கும் ஒரு சிறந்த மருந்தை கீழ் வரும் பாடல் மூலமாக அறியலாம். இப்பாடல் விச வைத்தியம் என்னும் நூலில் இருந்து கிடைக்கப் பெற்றது.
" கேளிரத்தம் பேய்ப்பீர்க்கன் சாற்றில் தோய்த்துக்
கொடியான் வாளமொடு துத்தந்தாரம்
நீளவே வெங்காரந் தன்னை வாங்கி
நேராக யிவையைந்தும் சமனாய்க்கூட்டி
மாளவே பேய்ப்பீர்க்கன் சாற்றாலாட்டி
வழித்துருட்டிக் காயவைத்து எடுத்துக்கொண்டு
பாழ்விடங்கள் தீண்டிமண்டை கொண்டால்கண்ணில்
பதித்துவிடு பொரிபட்ட பஞ்சாந்தானே "
பாடலின் விளக்கம்
பேய்ப்பீர்க்கன் சாற்றைக் கொதிக்க வைத்து அதில் இரசத்தைத் தோய்க்கவும், இப்படி மூன்று முறை மேற்படி சாற்றில் சுத்தியான இரசம், இத்துடன் வாளம், அரிதாரம் வெங்காரம் ஆக ஐந்து சரக்கும் சமனெடை எடுத்து கலுவத்தி விட்டு பேய்ப்பீர்க்கன் சாற்றால் அரைத்து மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு விசந் தீண்டியவர்களுக்கு உமிழ் நீர் அல்லது முலைப்பால் அல்லது கையந்தகரைச் சாற்றால் இழைத்துக் கண்ணில் தீட்டினால் விசம் மீளும்.