பேரண்டத்தை சுற்றி சித்தர்களை காண
"ஆணு மலசலம் அடவான பாண்டத்தில்
பூணவே விட்டுப் பொலிவாக மண்டலம்
காணக் கரைத்துக் கலந்துற்ற சூதத்தை
ஊணவே சாத்தா லுறவாய் உருக்கிடே."
"உருக்கி எடுத்து வுறவிடு சாரணை
செருக்கிய பாலுடன் செய்வாய்க் கனபுடம்
பெருக்குங் கவனந்தான் பேரண்டஞ் சுத்திடும்
வருக்கிய சித்தரில் வாசிப்பார் பாருமே."
திருமூலர் பாடல்
பாடலின் பொருள்:
நல்ல வியாதியற்ற தேகமுள்ளவரிடமிருந்து ஒரு பாண்டம் முழுவதும் சிறுநீர் வாங்கி அதில் ரசத்தை விட்டு ஒரு மண்டலம் ஊற வைத்து கசடு நீக்கி கரைத்து சத்தாக உருக்கி எடுத்து சாரணை ஏற்றி பாலுடன் சேர்த்து கனபுடமிட்டு வைத்து கொண்டால் பேரண்டம் முழுவதையும் ஒரு வினாடியில் சுற்றக் கூடிய வலிமை உண்டாகும் மற்றும் பேரண்டத்தில் வசிக்கும் சித்தர்களிடம் பேசலாம் என்பதே இப்பாடலின் பொருள்.