செம்பருத்தி எண்ணெய் தயாரித்தல் - Semparuthi oil - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, November 11, 2015

செம்பருத்தி எண்ணெய் தயாரித்தல் - Semparuthi oil

செம்பருத்தி எண்ணெய் செய்முறை


செம்பருத்தி எண்ணெய் தயாரித்தல் - Semparuthi oil
செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தி செடியில் கிடைக்கும் பூ மற்றும் இலைகளை பயன் படுத்தி மிக எளிமையாக மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கலாம். 

தேவையானவைகள்
  • புதிதாக மலர்ந்த செம்பருத்தி பூ - 7
  • செம்பருத்தி இலைகள் -7
  • தேங்காய் எண்ணெய் - 200 மில்லி
செய்முறை
செம்பருத்தி பூவில் உள்ள மகரந்த பகுதி முழுவதையும் நீக்கி மற்றும் இலைகளை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும். இவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து அரை மணி நேரம் ஊர விடவும். பின்  ஒரு கடாயில் இக்கலவையை போட்டு இளந்தீயினால் சூடு படுத்தவும். எண்ணெய் நன்கு சூடாணதும். அடுப்பிலிருந்து இறக்கி ஆரவிடவும். ஒரு சுத்தமான வெள்ளை துணியால் இக் கலவையை வடிகட்டி கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும். பிளாஸ்டிக் புட்டிகளை பயன் படுத்தாதீர்கள்.

வரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று மூறை இரவு நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்ததாக என்று கூறபடுகிறது.
மருத்துவ பயன்கள்
  1.  தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
  2.  தலை முடிக்கு மென்மையையும் மினுமினுபை தருகிறது.
  3. மெல்லிய முடியை வலுபடுத்தி திடமாக்கும்
  4. செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் போது சிறிது வேப்பிலை சேர்த்து தயாரித்து பயன்படுத்த தலையில் உண்டாகும் பொடுகினை கட்டுபடுத்தும்
  5. இளநரை உண்டாவதை தடுக்கிறது.
  6. தலையில் ஏற்படும் அரிப்பினை தடுக்க செம்பருத்தி எண்ணெய் அருமந்தாகும்.

hibiscus oil in tamil, semparuthi in tamil, semparuthi oil thayarikkum muarai in tamil, herbal oil in tamil, homemade herbal oil in tamil, semparuthi moolikai ennai, thalai mudi valara moolikai ennai, mooligai ennai, herbal hair oil in tamil. mooligai ennai eppadi seivathu, tamil. hibiscus in tamil. semparuthi poo mooligai ennai, thalai mudi minu minukka, thailai mudi valara, thalai mudi karuppaga, thalai mudi ila narai poga mooligai.