ஊது பத்தி செய்முறை
ஊது பத்தி கோவில்கள் தவிர நல்லது கெட்டது அனைத்து இடங்களிலும் பயன் படுத்தும் பொருளாக உள்ளது. ஊது பத்தி செய்வது மிக எளிமையான விசியம் தான். இதை முடிந்தவரை மூலிகை பொருட்களை கொண்டு செய்தால் மிகவும் நன்றாக இருப்பதோடு நோய்யின்றி வாழ ஓர் அடித்தலமாக அமையும்.
ஊது பத்தி தயாரிப்பில் வாசனை கொடுக்க இன்று பெரும்பாலும் இரசாயன பொருட்களை அதிகம் பயன் படுத்துகின்றனர். இதனால் ஒரு சிலருக்கு உடலில் ஒவ்வாமை போன்ற தொல்லைகள் ஏற்படலாம். முடிந்த வரை மூலிகை பொருட்களை கொண்டு தயாரிப்பதே சிறந்தது. ஊது பத்தியில் நிறைய வகைகள் உள்ளன இது அதன் மனத்தை பொறுத்து மாறுபடும்.
சந்தன வாசனை பத்தி செய்முறை
தேவையான பொருட்கள்
- வெட்டி வேர் - 5கிராம்
- கருவாப் பட்டை - 4 கிராம்
- கோரைக் கிழங்கு - 10 கிராம்
- சந்தன பவுடர் - 25 கிராம்
- அடுப்பு கரி
- கருவா பிசின் அல்லது வெல்லம் கரைசல்
- பொட்டாசியம் நைட்ரேட் சிறிது
- மூங்கில் குச்சி
சந்தன வாசனை பத்தி செய்முறை
வெட்டி வேர், கருவாப் பட்டை, கோரைக் கிழங்கு, சந்தன பவுடர், அடுப்பு கரி ஆகியவற்றை தனித் தனியாக நன்கு இடித்து சலித்து அதன் மென்மையான் பவுடர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பு கரிதூளுடன் சிறிது பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து கலக்கவும் இது கரித்துள் அனையாமல் தொடர்ந்து எரிய துணைபுரியும். மொத்த மூலிகை பொருட்களின் எடையளவு கரித்தூள் எடுத்து அதனுடன் நன்கு கலக்கி கொள்ளவும். கருவா பிசின் அல்லது வெல்ல நீர்கரைசலை சேர்த்து நன்கு பிசைந்து சிறு மூங்கில் குச்சியின் மேல் தடவவும். முதல் முறை முயற்ச்சி செய்பவர்களுக்கு பூசும் போது மேடு பல்லம் ஏற்படும். பழகிய பின் ஒரே சமமாக பூசலாம். பூசும் வேலை முடிந்ததும் நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலம்.