கண் பூவிற்க்கு கோரக்கர் சித்தர் அருளிய மூலிகை
"விள்ளுவேன் பூவிழுந்த கண்ணி னோர்க்கு
விகற்பமற ஐந்தேழு ஒனபது நாள்
சள்ளையறக் கோவைச்சாறு சிரசி லூற்றிச்
சாரவே தேய்த்துப்பின் காண்கை யாரைத்
தெள்ளிதமாய்ப் பெருவிரல்கள் நகத்திலும்
தொல்லையற ஊற்றிடவே பூவும் நீங்கும்
கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும்
களங்கமறக் குன்மவுப்பு கண்டுதேரே "
கோரக்கர் பாடலின் உறை :-
கோவை சாற்றை ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது நாள் தலையுச்சியில் தேய்த்துப் பெருவிரல்களின் நகத்திலும் ஊற்றி வைக்கக் கண்பூவு நீங்கும். இதில் ' காண்கையாரை ' என்பது கருதத்தக்கது. கண் என்று பாடம் கொண்டால் கண்ணிலும் ஊற்றவேண்டும் 'கையாரை' என்பதனைக் 'கையானை' என்று கொண்டால் கரிப்பான்சாறு ஊற்றல் வேண்டும். 'கையாரை' என்பத்ற்க்கு சிறு ஆரையாகிய ஆரையிலைச்சாறு என்றும் கொள்ளலாம். பொருந்து வகை செய்து காண்க.
கோவை இலை
|