வெள்ளைகடம்பின் மருத்துவ குணங்கள்
வெள்ளை கடம்பு |
வெள்ளைக்கடம்பு (Vellai Kadambu)
மருத்துவ பயன் உள்ள பகுதிகள்
இலைகள், கனிகள், வெள்ளைக்கடம்பு மரப்பட்டைகள்.
மருத்துவ பயன்
உடல் சூட்டை தணிக்கும், இணை விழைச்சி ஊட்டும், காய்ச்சலின் போது ஏற்படும் தண்ணீர் தாகத்தினை கட்டு படுத்தும், வயிறு சம்மந்தப் பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். வாய் புண்களை போக்கும், வாய் குழறுதலை தவிர்க்கும். தாய்ப்பால் சுரக்கச் செய்யும், சிறுநீரக எரிச்சலை குணப்படுத்தும், இருமலை போக்கும், பெண்களின் கருப்பை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்,
வெள்ளைகடம்பின் மருத்துவ பயன்பாடு
வெள்ளை கடம்பின்இலை சாரை பருக கொடுக்க காய்ச்சலின் போது ஏற்படும் அதி தாகத்தை கட்டு படுத்தும். இதன் இலை சாற்றுடன் சீரகம் அல்லது சர்கரையோடு சேர்த்து கொடுக்க வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும். கசாயம் தயாரித்து வாய் கொப்பளிக்க வாய் புண் குணமாகும்.