கோரை கிழங்கு
முத்தக்காசு, கோரை கிழங்கு |
வயல் வெளிகளில் கலையாக முளைக்கு ஓர் புல்வகை, இதன் இலைகள் நீண்டும், தட்டையாக காணப்படும், விதைகள் வேர்களுடன் நீள் வட்டத்தில் காணப்படும்.
மருத்துவ பயனுடைய பகுதிகள்
கோரையின் வேர் பகுதியில் உள்ள கிழங்கு முக்கிய மருந்து பொருளாக பயன்படுத்தப் படுகிறது.
கோரையின் வேறு பெயர்கள்
தமிழ் பெயர் : கோரை, முத்தக்காசு, கோரை கிழங்கு
ஆங்கிலம் : Nut Grass
கோரை கிழங்கு குணப்படுத்தும் நோய்கள்
ஆண் விந்து அணுக்களை பெருக்குகிறது, சிறுநீர், வியர்வையை பெருக்குகிறது, உடலின் சதை பகுதியையும், நரம்புகளையும் சுருங்கச் செய்கிறது. தாது வெப்பு அகற்றி உடலுக்கு பலம் உண்டாக்குகிறது.
கோரை கிழங்கு சூரணம்.
கோரை கிழங்கின் சூரணம் 1 கிராமுடன் தேன்கலந்து காலை, மாலை சாப்பிட புத்தி கூர்மை, தாது விருத்தி, பசிதீவனம், உடற்பொலிவு உண்டாகும்.