அழிஞ்சல் மருத்துவ பயன்கள் - azhinchil - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, August 23, 2015

அழிஞ்சல் மருத்துவ பயன்கள் - azhinchil



மருத்துவப் பயனுடைய அழிஞ்சல்

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. இதில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய இன வேறுபாடு உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. அழிஞ்சில் என்றும் அழைக்கப்படும்.

நோய்கள்

நோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல், பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் சாப்பிடுவதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுவதாயின் இடையிடையே 1 வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

கடி விஷங்கள்

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய்) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

கப நோய்கள்

இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

தொழுநோய்

சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

தோல் நோய்கள்

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

azhinchil maruthuva payangal noikal kadi visangal tholu noigal thol noigal,