அறுவதா - Aruvathaa - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, August 23, 2015

அறுவதா - Aruvathaa

சளி,காய்ச்சல் இசிவு, நீர்க்கோவை வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால்மாந்தம், மாந்த சுரம், கணை, வயிற்று போக்கு சுவாசிக்க இருமல் தணியும்
அறுவதா - Aruvathaa

அறுவதா மருத்துவப் பயன்கள்

இதன் இலைகள் மருத்துவப் பயனுடையது. வலி போக்குதல், வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல், மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.

சளி,காய்ச்சல் இசிவு, நீர்க்கோவை வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால்மாந்தம், மாந்த சுரம், கணை, வயிற்று போக்கு சுவாசிக்க இருமல் தணியும்
அறுவதா - Aruvathaa

குழந்தை

இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறுகுழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

குளிர்ச்சி நோய்கள்

இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர, சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

வயிறு

இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப ¼ முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால்மாந்தம், மாந்த சுரம், கணை, வயிற்று போக்கு ஆகியவை தீரும்.

இருமல்

உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் தணியும்.


aruvatha  irumal vayiru kulrichi kuzhanthai aruvatha aaruvatha maruthuvza payangal..