அத்தி மருத்துவ பயன்கள் - atthi maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Friday, July 24, 2015

அத்தி மருத்துவ பயன்கள் - atthi maruthuva payan


அத்தி

Atti Pazham, Athi pazham, Anjeer, Ficus carica, athi palam, athi, அத்திப்பழம், அத்தி, அத்தி மருத்துவ பயன்கள் - atthi maruthuva payan, அத்தி மருத்துவ குணங்கள் - atthi maruthuva kunangkal.

மற்றடுக்கில் அமைத்து முழுமையான இலைகளை உடைய பெருமர வகை. பால் வடிவச் சாரு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழத்தில் எல்லா மாவட்ட்ங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.



அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும். அத்திப் பாலைத் தடவிவர மூட்டுவலி விரைவில் தீரும்.


முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.


அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.


அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்பட்டை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசங்க் கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், மூலக்கிராணி (வயிற்றுப்போக்கு) தீரும்.


அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கறண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்


சீமை அத்திப்பழம்

சீமை அத்திப்பழம் பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும். சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.



keywords : Atti Pazham, Athi pazham, Anjeer, Ficus carica, athi palam, athi, அத்திப்பழம், அத்தி, அத்தி மருத்துவ பயன்கள் - atthi maruthuva payan, அத்தி மருத்துவ குணங்கள் - atthi maruthuva kunangkal.