கொம்பலகு-Hornbill-kompalgu - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, June 28, 2015

கொம்பலகு-Hornbill-kompalgu

கொம்பலகு 


keywords : kompalagu, iruvaachi iruvaayan, iruvaai kuruvi, aan paravai pen paravai, kerala paravaikal etcham, man, palli pambu, irakuakal.
Hornbill


அறிவியல் பெயர் : Ocyceros birostris

ஆங்கிலம் :  Hornbill



வாழ்நாள் : 50 ஆண்டுகள் வரை


தமிழ் பெயர்கள் : கொம்பலகு, இருவாய்க்குருவி, இருவாய்ச்சி, இருவாயன்


                    இயற்கையாக மரங்களில் அமைந்துள்ள பொந்துகள், மரங்கொத்தி பறவை வாழ்ந்து விட்டு சென்ற பொந்துகளில் வாழும் ஓர் பறவை இனம். கொம்பலகு பறவையின் மூக்கின் மேல் கொம்புகள் போல் அமைந்துள்ளது. இது பழங்கள், பூச்சியினங்கள், பல்லிகள் மற்றும் பாம்புகளை வேட்டையாடி உண்ணுகின்றது. பெர்ரி பழங்களை விரும்பி சாப்பிகிறது. இந்தியாவில் கேரளமாநிலத்தில் இப்பறவைகள் அதிகமாக காணப்பட்டன ஆனால் தற்சமயம் வேட்டையாடப்பட்டு பெரும் அளவு குறைந்து விட்டது ஆதலால்
கேரள அரசு இப்பறவைகளை வேட்டையாடுவதை தடைசெய்துள்ளது.




             ஆண், பெண் பறவை முட்டையிடும் காலத்தில் அதனுடைய கூடான மர பொந்தில் நுழைந்ததும் மண், அதனுடைய எச்சம், உமிழ்நீர் ஆகியவற்றை கொண்டு சுவர் போல் வைத்து அதில் சிறு துவாரம் வைத்து அடைத்துவிடும். அத்துவாரத்தின் வழியே தன் மணைவிக்கு தேவையான இரையை தேடிவந்து ஊட்டிவிடும். 

             பெண் பறவை முட்டையிட்டு குஞ்சி பொரித்து வெளிவரும் வரை சிறை வைத்து உணவு கொடுத்துவரும். குஞ்சுகள் பெரிதானதும் கூட்டினை உடைத்து வெளிவர ஆண் பறவையானது அனுமதிக்கும். இதைப்போலவே பெண் பறவையானது ஒரு குறிப்பிட்ட பருத்தில் இறகுகளை உதிர்த்து இரை தேட முடியாமல் தவிக்கும் அச்சமயதில் இவ்வாறே சிறைவைத்து உணவளித்து வரும்.







keywords : kompalagu, iruvaachi iruvaayan, iruvaai kuruvi, aan paravai pen paravai, kerala paravaikal etcham, man, palli pambu, irakuakal. indian hornbill , indian great hornbill great horn bill,