தலைமுடி தைலம்
தேவையான மூலிகைகள்
பொடுதலை
அ்றுகம் புல்
கருஞ்சீரகம்
தேங்காய் எண்ணை
பொடுதலை, அறுகம் புல் வகைக்கு 100கிராம் எடுத்து இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் கருஞ்சீரகம் 50 கிராம் பொடி செய்து சேர்த்து பிறகு 500 மில்லி தேங்காய் எண்ணை சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கலவையை மிதமான இளஞ்சூட்டில் அதாவது விராலல் எண்ணையை தெடும்போது வெது வெதுப்பாக இருக்க வேண்டும். அதிகமாக சூடு செய்தால் மூலிகை தன்மை மாறிவிடக்கூடும். இளஞ்சூட்டில் குறைந்தது 5 மணிநேரம் சூடுபடுத்தி நன்கு குளிர விடவும். பிறகு ஓர் வெள்ளை துணியால் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் காலை, மாலை தலையில் தடவி வர முடி மினுமினுப்புடன் காணப்படும்.
மருத்துவ பயன்
பொடுகை நீக்கும், தலை முடியில் ஏற்படும் அரிப்பை நீக்கும், தலை முடி வரட்சியின்றி மினுமினுக்கும்.
keywords, mooligai thailam. thalimudi mooligai thailam, herbal hair oil, koonthal thailam, mudi thailam, mooligai thailam seivathu eppadi, thengai ennai.layitam, laygiyam
மூலிகை தைலம், தலைமுடி மூலிகை தைலம், ஹேர் ஆயில், கூந்தல் தைலம், முடி தலைம், தேங்காய் எண்ணை. லேகியம்.