அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல் - Arugampul - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, May 23, 2015

அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல் - Arugampul

அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல்



அற்புத சக்தி வாய்ந்த அருகம்புல் - Arugampul
அருகம்புல் - Arugampul

 
அருகம் புல்லனின் மற்ற பெயர்கள்

Bermuda grass in English
Arugampul in Tamil
Dhub in Hindi
Durva in Sanskrit
Karuka in Malayalam
Garikagoddi in Telugu
Garikoihallu in Kannada 



 "இறைவன் பொய் என்றால் சாணியைப் பார்"

                இப் பலமொழியை கிராமங்களில் சாதாரணமாக கூறப்படுவது வழக்கம். மாட்டு சாணத்தை ஒர் இடத்தில் போட்டு வைத்தோமானால் அதில் கரையான் பிடிக்கும். மாட்டு சாணத்தை கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து அதில் அருகம் புள்ளை செருகி வைத்தோமானால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

 

அருகம்புல்லின் மருத்துவ பயன்


             அருகம்புல் சாறு உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள அமிலத்தன்மையை குறைக்கின்றது. அடிக்கடி சோர்வடைதல், உடல் அரிப்பு, தேமல், ஊளை சதையைக் குறைக்கின்றது. பல் ஈருகளில் விசக்கிருமிகளை கொன்று பல் வலியை நீக்குகிறது.

           நுரையீரலில் தங்கியுள்ள கோழைகளைக் கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் மார்புச் சளி, ஆஸ்த்துமா, மூச்சு இறைப்புக்கு சிறந்தது.

           இரத்தத்தை சுத்தப் படுத்துவத்துடன் இரத்த ஓட்டம் உடலில் எல்லா பாகங்களிலும் சீரான முறையில் செல்வதால் தலை வலி, உடல் வலி, மூட்டு வலி, இரத்த அழுத்தம், மூலம், குடல் புண், மாதவிடாய் போன்ற தொல்லைகளை நீக்குகிறது.
            உடலில் பல சுரப்பிகள் உள்ளன. அதில் சில சுரப்பிகளின் செயல்தன்மை இழப்பதால் பல நோய்கள் வருகின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப் பொருள் சக்கரையாக மாறி பின் குளுகோசாக மாறுகிறது. இதன் காரணமாக இரத்ததிலும், சிறு நீரிலும் இன்சுலின் அளவு அதிகமாகிறது. இன்சுலின் அளவை கட்டு படுத்த இன்சுலின் ஊசிகள் அல்லது மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைந்து பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

            ஆனால், இயற்கையாக கிடைக்கும் அருகம்புல் மற்ற கீரை வகைகள் மற்றும் பழங்கள் செயல் இழந்த உடல் உருப்புகளை சிறுக சிறுக எல்ல சுரப்பிகளையும் இயற்கையாக செயல்பட செய்து இன்சுலின் அளவை கட்டுபடுத்துகிறது.



 Arugampul Medicinal Uses