பெண்கள் சமையல் செயும் போது இறை வழிபாடு - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, May 13, 2015

பெண்கள் சமையல் செயும் போது இறை வழிபாடு

பெண்கள் சமையல் செயும் போது இறை வழிபாடு அவசியம்



குடும்ப பிரச்சனைகளையோ குழந்தைகளை திட்டி கொண்டோ சந்தேக குணத்துடனோ, சண்டை போட்டு கொண்டோ, அண்டை அயலரினை எண்ணி பொராமை கொண்டோ உணவை சப்பிடும் போது சமைத்தவரின் எண்ண அலைகள் உணவை தாக்கி அதன் வழியாக சாப்பிடுவர்களை நிச்சயம் தாக்கும் தெய்வம் குடி கொள்ளும், தனவரவு மிகும், குழ்ந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு பெறுவார்கள்


             பெண்கள் சமையல் செய்யும் போது குடும்ப பிரச்சனைகளையோ, குழந்தைகளை திட்டி கொண்டோ, சந்தேக குணத்துடனோ, சண்டை போட்டு கொண்டோ, அண்டை அயலரினை எண்ணி பொராமை கொண்டோ அல்லது வேறு ஏதேனும் தீய எண்ணங்களுடன் உணவை சமைக்க கூடாது. இவ்வாறு சமைக்கப்பட்ட உணவை சப்பிடும் போது சமைத்தவரின் எண்ண அலைகள் உணவை தாக்கி அதன் வழியாக சாப்பிடுவர்களை நிச்சயம் தாக்கும்.

            மனித எண்ண அலைகளுக்கு அளவற்ற சக்தி உண்டு என்பதை மறாவாதீர்கள். குடும்ப பெண்கள் சமைப்பது ஒரு நாளோடு முடிவதில்லை தினம் தினம் தீய எண்ணங்களுடன் சமையல் செய்யும் போது என்ன நேரிடும்? இதனால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியிலந்து  பிரச்சனைகள் நீடித்தும் காணப்படும். வீட்டில் பணம் சேராது, தெய்வ வருகை இருக்காது.

சமைக்க வேண்டிய முறை


              இந்து, இஸ்லாம், கிருத்துவம் அல்லது எந்த மதத்தை சார்ந்த பெண்களாக இருந்தாலும் சரி சமையலை தொடங்கும் முன் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மனதை ஒருமுக படுத்தி அவரவர் இஸ்ட தெய்வங்களை மனதளவில் வணங்கி உங்களுக்கு தெரிந்த தெய்வ பாடல்களை பாடி கொண்டு சமைக்கவும். பாத்திரத்தில் சமையல் பொருட்களை போடும் பொழுது மென்மையாக போட வேண்டும், எடுத்து எறிய கூடாது. பாத்திரங்களை மென்மையாக பயன்படுத்த வேண்டும்.

             இவ்வாறு சமைக்கபட்ட உணவை உண்பவர்கள் மட்டும்மின்றி சமைத்தவரின் மனமும் மகிழ்ச்சியடையும், உணவும் சுவை மிகும். இப்படிபட்ட வீட்டில் தெய்வம் குடி கொள்ளும், தனவரவு மிகும், குழ்ந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு பெறுவார்கள்.