தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை - thavasi murungai, saniyasi murungai
தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை |
எறத்தாழ வட்ட வடிவமான சிறுகாம்புடைய முழுமையான இலைகளை எதிரடுக்கில் கொண்ட
சிறு செடி. கொத்தான மலர்களைப் பெற்றிருக்கும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் காணப்படுகிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. கோழையகற்றும் குணமுடையது.
மருத்துவ பயன்கள்
இலைசாற்றை
15 மி.லி காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இரைப்பிருமல், பொடி இருமல் அகியவை
தீரும். செடியை முழுமையாக
உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப் பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து
உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.
அடிப்பட்ட வீக்கம்
காயங்களுக்கு, இலையை வதக்கிக் கட்டிய உடன் வேதனை குறைந்து குணமாகும்.