மாடி வீட்டு தோட்டம் - maadi veetu thottam - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, April 28, 2015

மாடி வீட்டு தோட்டம் - maadi veetu thottam

மாடி வீட்டு தோட்டம் -  Maadi veetu thottam

மன அழுத்தத்தை குறைக்கும் மாடி வீட்டு தோட்டம் -  Mana azhuthathai kuraikkum maadi veetu thottam. சிவாயநகரைச் சேர்ந்தவர் என் சக்திவேல் பட்டுவாரிய விஞ்ஞானி புடலங்காய், பீர்க்கங்காய், மிளகாய், வெண்டைகாய், அரளிப்பூ, செம்பருத்தி, அல்லி, குரோட்டன்ஸ் விதவிதமான பூச்செடிகளும், புதினா, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, மூலிகை செடிகளும், பொன்னங்கண்ணி, கீரை , மாடி வீட்டு  தோட்டத்தில் ஆலமரம் வளர்கப்படும், மலர்கள் ,காய்கறிகள், விஞ்ஞானி சக்திவேல்,சேலத்தில், மண்தொட்டி,  வாகனங்களின் நச்சுப்புகையால் இயற்கையான காற்றை சுவாசிக்கமுடியாத நிலை இருக்கிறது, பிள்ஸ்-2, தூதுவளை,துளசி,எலுமிச்சை கலந்த மூலிகை பானம். tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்

                      சேலம் சிவாயநகரைச் சேர்ந்தவர் என் சக்திவேல்.இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய பட்டுவாரிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டு மாடியில் ஒரு அழகிய தோட்டத்தை அமைத்து பராமரித்து வருகிறார்.இந்த மாடி வீட்டு தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காய்கறிகள், பூக்கள், ஆலமரம், மூலிகை செடிகள் என்று ஒரு சோலைவனமாக காட்சி அளிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும் மாடி வீட்டு தோட்டம் -  Mana azhuthathai kuraikkum maadi veetu thottam. சிவாயநகரைச் சேர்ந்தவர் என் சக்திவேல் பட்டுவாரிய விஞ்ஞானி புடலங்காய், பீர்க்கங்காய், மிளகாய், வெண்டைகாய், அரளிப்பூ, செம்பருத்தி, அல்லி, குரோட்டன்ஸ் விதவிதமான பூச்செடிகளும், புதினா, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, மூலிகை செடிகளும், பொன்னங்கண்ணி, கீரை , மாடி வீட்டு  தோட்டத்தில் ஆலமரம் வளர்கப்படும், மலர்கள் ,காய்கறிகள், விஞ்ஞானி சக்திவேல்,சேலத்தில், மண்தொட்டி,  வாகனங்களின் நச்சுப்புகையால் இயற்கையான காற்றை சுவாசிக்கமுடியாத நிலை இருக்கிறது, பிள்ஸ்-2, தூதுவளை,துளசி,எலுமிச்சை கலந்த மூலிகை பானம். tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
 மன அழுத்தத்தை குறைக்கும் மாடி வீட்டு தோட்டம்

                    இந்த மாடி வீட்டு தோட்டத்தில் புடலங்காய், பீர்க்கங்காய், மிளகாய், வெண்டைகாய், மட்டுமின்றி அரளிப்பூ, செம்பருத்தி, அல்லி, குரோட்டன்ஸ் விதவிதமான பூச்செடிகளும், புதினா, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி என்று மூலிகை செடிகளும், பொன்னங்கண்ணி உள்ளிட்ட கீரை வகைகளும் வளர்ந்துள்ளன.

மன அழுத்தத்தை குறைக்கும் மாடி வீட்டு தோட்டம் -  Mana azhuthathai kuraikkum maadi veetu thottam. சிவாயநகரைச் சேர்ந்தவர் என் சக்திவேல் பட்டுவாரிய விஞ்ஞானி புடலங்காய், பீர்க்கங்காய், மிளகாய், வெண்டைகாய், அரளிப்பூ, செம்பருத்தி, அல்லி, குரோட்டன்ஸ் விதவிதமான பூச்செடிகளும், புதினா, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, மூலிகை செடிகளும், பொன்னங்கண்ணி, கீரை , மாடி வீட்டு  தோட்டத்தில் ஆலமரம் வளர்கப்படும், மலர்கள் ,காய்கறிகள், விஞ்ஞானி சக்திவேல்,சேலத்தில், மண்தொட்டி,  வாகனங்களின் நச்சுப்புகையால் இயற்கையான காற்றை சுவாசிக்கமுடியாத நிலை இருக்கிறது, பிள்ஸ்-2, தூதுவளை,துளசி,எலுமிச்சை கலந்த மூலிகை பானம். tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
 மன அழுத்தத்தை குறைக்கும் மாடி வீட்டு தோட்டம்

                  இது மட்டுமின்றி இந்த மாடி வீட்டு  தோட்டத்தில் ஆலமரம் வளர்கப்படும் வினோதத்தை காண முடிந்து.அபூர்வ சகோதர்கள் படத்தில் வரும் குள்ள அப்பு கமல் கேரக்டர் போன்று,இந்த ஆலமர செடிகள் வைக்கப்படுள்ள தொட்டிகளின் அருகே விழுதுகள் விட்டு சிறிய அளவில் பொன்சாய்மரக்காட்சி அளிக்கிறது. இத்தகய பொன்சாய்மரங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராது என்பது குறிபிடதக்கது.இவ்வாறு திரும்பிய திசை எங்கும் மலர்கள் ,காய்கறிகள், என்று ஒரு தோட்டத்துக்குள் நுளைந்த எண்ணம் நம்மில் மேலோங்கியது.

இந்த மாடி வீட்டு தோட்டத்தை உருவாக்கியது குறித்து பட்டு  விஞ்ஞானி சக்திவேல் கூறியதாவது;-

                எங்கள் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு.அங்கு எங்களுக்கு 10 எக்கர் நிலம் இருந்தது.நான் வேலை நிமித்தமாகவும்,குழந்தைகள் படிப்புக்காகவும்  சேலத்தில் சிவாய நகரில் சொந்த வீடு கட்டி குடியேறினேன்.அப்போது ஊரில் இருந்த எங்கள் விலை நிலத்தை விற்பனை செய்து விட்டு இங்கு வந்தோம்.என்னுடைய மனைவி அமிர்தம் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என்னுடைய 2 மகள்களில் அம்ரிதா கோவையில் உள்ள வேளான் கல்லூரியில் பி.எஸ்சி. வேளண்மை பட்டப்ப்டிப்பும், சுவாதி பி.ஸ்சி.இயற்பியல் பாடப் பிரிவில் பட்டபடிப்பும் படித்து வருகின்றனர்.

               என்னுடைய தாயார் லட்சுமி கிராமத்தில் விவசாய வேலையில் ஆர்வம் காட்டியவர் என்பதால் நகரத்து வாழ்க்கை அவருக்கு சற்று எமாற்றம் அளிக்கும் என்பதை அறிந்து, அவருக்காக தான் இந்த மாடி வீட்டு தோட்டம் அமைக்க முடிவு செய்தேன். கடந்த 2008-ஆண்டு முதன்முதலில் காய்கறி செடிகள் மற்றும் மூலிகை செடிகள்,பூச்செடிகள் என்று மாடியில் உள்ள மண்தொட்டிகளில் வைத்து பராமரிக்க தொடங்கினோம். எனது தாயார் இந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்சுவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

                   இந்த மாடி தோட்டத்திற்கு மாடியில் தண்ணீர் இறங்காத அளவிற்கு காங்கீரிட் தொட்டிகளை அமைத்து அதில் மண் மற்றும் இயற்கை உரங்களை இட்டு இந்த தோட்டத்தை இன்றளவும் பரமரித்து வருகிரோம். நகரத்து வாழ்க்கையில் மக்கள் வாகனங்களின் நச்சுப்புகையால் இயற்கையான காற்றை சுவாசிக்கமுடியாத நிலை இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், எங்கள் வீட்டு மாடி தோட்டத்திற்கு வந்தவுடன், இயற்க்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த தோட்டத்து செடிகளில் இருந்து வெளிவரும் தூய்மையான ஆக்சிஜன் காற்றை சுவாசிப்பது மனதிற்கு இதம் அளிக்கிறது. மேலும், என்னுடைய குழந்தைகள் இந்த மாடி வீட்டு தோட்டத்தில் தான் பத்தாம் வகுப்பு, பிள்ஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கு படித்தனர்.வீட்டின் உள் அறையில் படிக்க உகந்த சூழல் இல்லாத நிலையில் மாடியில் உள்ள இந்த தோட்டமே மனதிற்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக் இருப்பதால் எங்கள் குழந்தைகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த இந்த தோட்டம் உதவியது என்றே நான் கூறுவேன்.

                    மேலும் மாடிவீட்டு தோட்டத்தில் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால்  மன அழுத்தத்தை குறைக்கும் கருவியாக திகழ்கிறது. இப்போது வீட்டு தேவைகளுக்கு காய்கறிகள், சாமி வழிபாட்டுக்கு பூக்கள், மூலிகை தேநீர்(தூதுவளை,துளசி,எலுமிச்சை கலந்த மூலிகை பானம்)என அனைத்துக்கும் எங்கள் மாடி வீட்டு தோட்டமே உபயதாரராக உள்ளது. ரசாயன பொருள் கலப்பு இல்லாத இயற்கை தொழு உரம் போட்டு வளர்க்கப்படும் இந்த தோட்டத்தில் பூச்செடிகளுக்கு பூச்சிகள் வருவதை தவிர்க மட்டும் அந்த செடிகளுக்கு வீரியம் குறைந்த மருந்த்துகளை தெளிக்கிறேன். இப்போது  வேளாண்மை பட்டப்படிப்பு படிக்கும் என்னுடைய மகள் புதிய ரக செடிகளை கொண்டு வந்து வளர்க உதவுகிறார், இபோது எங்கள் குடும்பம் மாடி வீட்டு தோட்ட பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

                   இந்த நாகரிக உலகத்தில் இயற்கை நமக்கு அளித்த தூய காற்றை சுவாசிக்க இது போன்ற மாடி வீட்டு தோட்டங்களை அடுத்த தலைமுறைக்கு நாம் வரபிரசாதமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இவ்வாறு பட்டுவாரிய விஞ்ஞானி N.சக்திவேல் கூறியுள்ளார்.

                  பட்டுவாரிய விஞ்ஞானி N.சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். 

தினமலர் நாளிதழுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.