பாம்பு கடிக்கு மூலிகை மருத்துவம் - pambu kadikku mooligai maruthuvam - ஔசதம் - OWSHADHAM -->

Monday, April 27, 2015

பாம்பு கடிக்கு மூலிகை மருத்துவம் - pambu kadikku mooligai maruthuvam

பாம்பு கடிக்கு மூலிகை மருத்துவம் - pambu kadikku mooligai maruthuvam


தும்பை


          எதிரடுகில்  அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் பாத வடிவிலான தேன் நிறைந்த வெந்நிறச் சிறு மலர்களையும் உடைய சிறு செடி. கோடை காலத்தில் எல்லா இடங்களிலும் காணப்பெறும். ஈரமுள்ள இடங்களில் எல்லா பருவத்திலும் தழைத்திருக்கும். இலை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மருத்துவம்

 தும்பைச்சாறு 25 மி.லி பாம்பு தீண்டியவர்க்கு கொடுக்க 2, 3 தடவை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப் பானையில் பச்சரிசி, பாசிப்பயிறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். 1 நாள் உறங்கக்கூடாது. 3 நாள்கள் உப்பில்லாமல் பொங்கல் கொடுத்தால் பாம்பு விஷக் கடி தீரும். மயங்கிய நிலையில் இருப்பின் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையெனில் இறப்பு உறுதி.


  தும்பைச்சாறு 1 மி.லி தேனில் கலந்து கொடுக்கக் கொட்டு நவாயில் இலையை அரைத்து கட்டினால் தேள் நஞ்சு இறங்கும். கடுப்பு நீங்கும்.
 
 இலையை அரைத்து தடவிக் குளிக்க நமைச்சல்,சொறி சிரங்கு தீரும்.