கொள்ளு மருத்துவ பயன்கள் kollu maruthuvam - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, April 16, 2015

கொள்ளு மருத்துவ பயன்கள் kollu maruthuvam

கொள்ளு மருத்துவ பயன்கள்


கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
 

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
 

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
 

kollu maruthuva payankal

அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
 

மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
 


1)கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

2)இது பல வகையான நோய்களை உடலில் குணப்படுத்துகிறது.


3)இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.


4)இரவு முழுவதும் ஊறவைத்து கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிங்க.


5)அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.


6)ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.


7)ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.மிளகு,சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.


8)காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும்.


9)உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால்,முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.


10)என்னதான் இதை சாப்பிட்டாலும் கொஞ்சமாக உடற்பயிற்சியும் தேவை 


              குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.


அதை விட இரவு  ஒரு ஸ்பூன் கொள்ளு போதும் 1 கிளாஸ் தண்ணீருக்கு. கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.



kollu maruthuva payankal, gollu, kollu in english, kollu botanical name, kollu udal ilaikka, udal edai kuraiya, udal paruman kuraiya kollu, kollu samaiyal, kollu in tamil, kollu siddha maruthuva payan, sitdha maruthuvam, sittha maruthuvam murai, kollu sirappu amsangal, கொல்லு சிறப்பு அம்சங்கள், மூலிகை சிறப்பு அம்சங்கள், கொழ்ழு, கொள்லு,