பனை மரம் மருத்துவ பயன்கள் - ஔசதம் - OWSHADHAM -->

Monday, April 6, 2015

பனை மரம் மருத்துவ பயன்கள்

பனை, ஓலை, மட்டை, கிழங்கின் மற்றும் நுங்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்


                                  பனை மரங்களில் இருந்து கிடைக்க கூடிய நுங்கு, ஓலை மற்றும் கருக்கு பட்டை அனைத்துமே உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று அதுவும் சரியாக வெய்யில் காலங்களில் மட்டுமே பனை மரத்தின் கனிகளை ருசிக்க முடியும்.  இதை கடவுளின் படைப்புகளில் சிறப்பான ஒன்று எனவும் கூறலாம்.


 பனை மரங்களில் இருந்து கிடைக்க கூடிய நுங்கு, ஒலை மற்றும் கருக்கு பட்டை அனைத்துமே உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று அதுவும் சரியாக வெய்யில் காலங்களில் மட்டுமே பனை மரத்தின் கனிகளை ருசிக்க முடியும்.  இதை கடவுளின் படைப்புகளில் மிகச் சிறப்பான ஒன்று எனவும் கூறலாம்.
பனை மரம்
மருத்துவம்:-

                வண்டுக்கடி:-

                            நன்கு முற்றிய அடி மரத்தில் ஆயுதம் பயன்படுத்தாமல், கற்களால் கொட்டும் போது அவ்விடத்தில் நீர் வடியும் அதை எடுத்து வண்டுகடி உள்ள இடத்தின் மீது தடவவும் இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர வண்டுகடி மறைந்து விடும். மரத்தின் மீது கொட்டும் முன் அம்மரத்திடம் உண்ணை காயப்படுத்துவதற்காக என்னை மண்ணித்து விடு என்று மூன்று முறை மனதிற்குள் வேண்டிக் கொள்ளவும். இப்படி செய்யும் போது அடுத்த பிறவியில் பாவம் சேராமல் இருக்கும்.


பயன்கள்:-

                       பனை மரம் மிகவும் வழுமையனது, பதினைந்து முதல் இருபது வருடங்கள் கடந்த மரங்களின் தண்டு பகுதியில் துளையிட்டு பர்த்து தேர்வு செய்து கூறை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு விட்டமாக பயன்படுத்தப் படுகிறது.

பனை மரத்தின் ஓலை


பனை ஓலையால் வேயப்பட்ட வீடு
பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறி




பனை மர ஓலையின் பயன்கள்:-

                              பனை ஓலையை கொண்டு வேயப்பட்ட வீட்டின் உட்புறம் மிகவும் குளிர்ச்சியக இருக்கும். வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மழை காலங்களின் வெதுவெதுப்புடனும் இருக்கும் இது இயற்கையானது. ஓலையால் வேயப்பட்ட அழகான வீடு அமைக்க ஒரு ஏசி மெசின் வாங்கும் பணத்தில் பாதியே ஆகும். இது போன்ற வீட்டை மொட்டை மாடிகளின் மீதும் அமைத்து இயற்கையை உணர்ந்து ரசிக்கலாம்.

ஓலைச்சுவடிகள்
                  அந்த காலக்கட்டங்களில் ஓலைச்சுவடிகள் பனை ஓலையில் தான் செய்யப்பட்டன. இதில் பல நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவைகள் இன்றும் புதிது போல் உள்ளது. ஆனால் இன்று பேப்பரில் எழுதப்பட்டது எத்தனை ஆண்டுகள் உள்ளன??!!!


நுங்கு
சிறு வெய்யில் கொப்புளங்கள்

                       பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய நுங்கு வெய்யில் காலங்களில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியான ஓர் உணவு. நுங்கில் வைட்டமின் பி,சி, அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின்,  மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

மருத்துவம்:- 
 
           வியர்வை கொப்புளங்கள்:-

                         வெய்யில் காலங்களில் குழந்தைகளின் கை, கழுத்து, முதுகு, விரல்கள் மற்றும் நெற்றி பகுதிகளில் சிறு சிறு வியர்வை கொப்புளங்கள் நெருக்கமாக பரவி காணப்படும். இதற்கு, ஒரு நுங்கை சாப்பிட கொடுத்து விட்டு மற்றொரு நுங்கில் உள்ள நீரை குழந்தையின் உடல் முழுவதும் பூசி மூன்று மணி நேரம் உடலில் நன்கு ஊரி காய்ந்த பிறகு குளித்து விடவும் இதை தொடர்ந்து 4 நாட்கள் செய்து வந்தால் கொப்புளங்க்கள் மறைந்து விடும். மீண்டும் வராது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல பலனை கொடுக்கும். நுங்கு உஷ்ணம் காரணமாக வரக்கூடிய அனைத்து நோகளையும் குணப்படுத்தும்.

பனை மர கன்று
 மருத்துவம்:-

                   கண்நோய்கள்:-

                                 பனை மரத்தில் ஓலைக்கும் மரத்திற்கும் இடையே உள்ள பகுதியை பட்டை அல்லது மட்டை என்று அழைப்பார்கள். இது மெட்ராஸ் ஐ, உஷ்ணம் காரணமாக கண் சிவந்து போதல், கணில் அடிபடும் போது பனை மரத்தின் இளம் பட்டையை நசுக்கி அதில் வரும் சாறை வெள்ளை துணியால் வடிகட்டி கண்களில் விட்டால் கண்நோய்கள் அனைத்தும் தீரும்.

பனங்கிழங்கு

                பனங்கிழங்கு சத்தான உணவு, இது உடலுக்கு வலுவை கொடுக்கும் மேலும் ஆண்மை சக்தியை பெருக்கும்.


               இயற்கையை அழித்து செயற்கையாய் வழ்ந்து கொண்டிருக்கும் நாம் இனியாவது செயற்கையை விட்டு இயற்கைக்கு தலை வணங்கி அதன் வ்ழி செல்வோம். வாருங்கள்....

panai maram, kallu, theluvu, pothai porul, paothai neer, sunnampu theluvu, kulirchi, panai maram vandukai, vaal naal, mara vittam, panai olai visiri, olai veedu, kudisai veedu, panaimara olai, olai suvadi seivathu eppadi, nongu maruthuva payan, veil koppulangal, olai suvadi eluthaani, viyarvai koppulangal, panang kizhangu pana kilangu, kan sivappu, panai siddha maruthuvam. panai maram in tamil, panai maram in english, paniai maram botanical name. palm tree in tamil. patha neer, patha nir, batha nir, pathanir, pathaneer