நோய் தீர்க்கும் பழனி முருகன் அபிசேக பால் - Noi kunamakum palani murugan abisega paal - ஔசதம் - OWSHADHAM -->

Friday, September 8, 2017

நோய் தீர்க்கும் பழனி முருகன் அபிசேக பால் - Noi kunamakum palani murugan abisega paal

நோய் குணமாக்கும் பழநி முருகன் 


பழநி முருகன் கோவிலில் முருகனுக்கு செய்யப்படும் அபிசேகங்களில் பால் அபிசேகமும் ஒன்று, அபிசேகம் செய்த பாலை பக்தர்களுக்கு முருகனின் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பாலை குடிப்பதனால் என்ன பலன், முருகனின் அருள்கிடைக்குமா என்ற சந்தேகம் இந்த நவ நாகரிக கால மக்களுக்கு வருகிறது, சிலர் அலட்சியம் செய்வதும் உண்டு. இதைப்பற்றி விரிவாக காண்போம்.




அபிசேக பால் 

பழநி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணத்தில் செய்யப்பட்டது இச்சிலைக்கு  அபிசேகம் செய்த பாலை குடிப்பதனால் 100% உண்மையான நல்ல பலன் உண்டு இதனால் மனித இனத்திற்க்கு உண்டாகும் 4448 நோய்களும் குணமாகும் என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.

நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தர்

போகர் மனித இனத்தை காப்பதிலும், இறப்பில்லாமல் வாழவைப்பதில் அதிக ஆர்வத்துடன் பல மருந்துகளையும் காய கல்பங்களையும் செய்தார். இறுதியாக இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மூலிகையும் மந்திரத்தை கடும் தவத்தினால் கற்று ஆனந்த கூத்தாட்டம் போட்டு முடிவில் மூத்த முனிவரிகளின் தவத்திற்க்கு இடையூறு ஏற்ப்பட்டத்தால் சாபத்திற்க்கு ஆளாகி கற்ற மந்திரத்திம் பயன்படாது போனது. பின் மோரு மலையில் இருந்து பொதிகை மலைக்கு வந்து தியானத்தில் ஆழ்ந்த போகருக்கு அன்னை உமையவள் காட்ச்சி தந்து போக உலக உயிர்களை காப்பதும் அழிப்பதும் எனது பணி நீ பழனிக்கு சென்று எனது மகன் முருகன் வழிபடு என்று கூறி மறைந்தார். 

பழநி முருகன் நவபாஷாண சிலை செய்தல்

போகர் பழநீ மலைக்கு வந்து கடும் தவம் செய்ய சுவாமி முருகன், போகர் முன் தோன்றி போகரே நீர் எனக்கு நவபாஷாண சிலை செய்து மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ப்படுசெய் என்று கூறி, அதற்காண வழிமுறைகளை பற்றி கூறி மறைந்து சென்றார். இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த போகர் நவபாஷாண சிலையை வடிவமைத்தில் ஆர்வகமாக செயல்பட்டார்

போகர் மற்றும் அவருடன் அந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் சேர்ந்து போகர் சொல்படி 400 மூலிகைகளை கொண்டு மூலிகைகளுக்கு புகழ் பெற்ற இடமான சதுரகிரி மலையில் 9 விதமான நவபாஷாணங்களை செய்து அதன் விஷத்தன்மையை நீக்கி பழநி முருகன் நவபாஷாண சிலையை வடிவமைத்துள்ளனர். நவ என்றால் 9 என்று பொருள், பாஷாணம் என்றால் மருத்துவ குறிப்பின்படி விஷத்தன்மை வாய்ந்த பொருள் என்று பொருள், ஒன்பது பாஷாணங்களின் கூட்டு பெயரே நவபாஷாணமாகும் இதனை கொண்டு பழனி முருகனின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  

சிலை செய்ய பயன் படுத்தப்பட்ட பாஷாணங்கள்

  1. கொளரிப் பாஷாணம்
  2. கெந்தகப் பாஷாணம்
  3. சீலைப் பாஷாணம்
  4. வீரப் பாஷாணம்
  5. கச்சாலப் பாஷாணம்
  6. வெள்ளைப் பாஷாணம்
  7. தொட்டிப் பாஷாணம்
  8. சூதப் பாஷாணம்
  9. சங்குப் பாஷாணம்
மேற்க்கூறிய ஒன்பது பாஷாணங்களை கொண்டு பழனி முருகன் நவபாஷாண சிலையை செய்துள்ளார்கள், இச் சிலையை செய்து முடிக்க போகர் எடுத்து கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் இயற்க்கையும் தனது சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவியதாக குறிப்பிடுகின்றனர்

சிலை செய்தபின் முருகப் பெருமான் அருளியபடி பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்துள்ளனர், அந்த அபிஷேக பிரசதத்தை சாப்பிட்ட பக்தர்கள் நோய் நீங்கி, சுகவாழ்வு வாழ்ந்தனர் அதன் பின் சீனா சென்று வந்த போகர் சிலகாலம் பழனியில் வாழ்ந்து சாமதியடைந்தர் அவரது சமாதி பழநீ ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென் மேற்க்கு பகுதியில் உள்ளது.

சுவாமி சிலை அமைப்பு

சுவாமி தண்டாயுதபானி சிலையின் முகம் பெண் வடிவமுடையது தலைபகுதி முடிவடிவம் பின் புற கொண்டையும் மற்றும் அழங்கார அணிகலன்களுடன் கொண்டுள்ளது. காதில் மகர குண்டலமும் அமைந்துள்ளது. மார்பு ஆண்வடிவம் நெஞ்சியில் குழியும் கொங்கையில்ல தன்மையும் அணிகலன் ஆழங்கார வடிவமும், எந்த குறியும் இல்லாத நிலையில் சிலை அமைந்துள்ளது. மேல் இருந்து கீழே வர வர குறுகிய நிலையில் வலது கையில் தண்டும், இடது கை இடுப்பிலும் கொண்டும் குன்றின் மேல் நிற்க்கும் பாதமில்லா அமைப்பில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

நவபாஷாணத்தில் செய்யப்பட்ட முருகன் சிலையின் பலன்.

ஒன்பது பாஷாணங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவகிரங்களை குறிக்கின்றன ஆகையால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் பழனி சென்று வர தோஷம் நீங்கி நிம்மதி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

அபிஷேம் செய்யும் போது சிலை மீது பால், பன்னீர், சந்தம், எண்ணெய் அனைத்தும் மருத்துவ சக்திவாய்ந்தவையாக மாறிவிடுகின்றன இதை சாப்பிடுவதால் அல்லது மேலே பூசுவதினால் உடலில் தேன்றும் 4448 நோய்கள் குணமாகின்றன. 

இரவில் பழநி முருகன் சிலை அதிக வெப்பமடைவதால் முருகன் மீது சந்தனம் பூசப்படுகிறது காலையில் சந்தனம் நிறம் மாறி அதி அற்ப்புத நோய் தீர்க்கும் மருந்தாக சந்தனம் மாறி இருக்கும்.

தொடர்ச்சியாக அபிஷேகம் தொடர்ச்சியாக நடை பெறுவதால் சுவாமி சிலையில் இருந்து மதுரமான மனம் வீசி கொண்டே இருக்கும் இதனால் சிலையை நேரடியாக தரிசிக்கும் போது நோய்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

பழநி மலை ஏறி சுவாமியை தரிசித்தால் சுவாசமும், மனமும் ஒரு நிலை பட்டு சுவாமியை ஒரு வினாடி பார்த்தவுடன் மதுரமான மருத்து சக்தியினால் ஆத்ம பீடம் என்ற புருவ மத்தியில் உணர்வு தூண்டப்பட்டு இரத்தம் சுத்தியாகிறது இதனால் ஜீவ காந்தம் என்ற ஒரு வகை சக்தி ஏற்ப்பட்டு நோய்கள் நீங்கி நீண்ட ஆயிலுடன் வாழ வழி வகுக்கிறது.மேற்கூறிய தகவல் குறித்து போகர் நூல்களில் குறிப்பு உள்ளது.
keywords
palani murugan temple, palani temple history, palani temple darshan palani temple alangaram, palani temple images, age of palani murugan temple, palani temple path, palani navapashanam, palani temple steps count, palani murugan raja alankaram photos, lord murugan history in tamil language, history of palani murugan temple in tamil, thiruchendur murugan temple history in tamil, palani murugan temple,palani murugan temple photos, palani murugan original statue, palani murugan statue secret navapashanam secrets, palani murugan original, statue palani murugan idol mystery,navapashanam meaning in tamil, navapashanam details in tamil, navapashanam ingredients palani murugan original photos, navapashanam ingredients, tamil language, bogar, pogar, bokar, pokar, bohar, pohar, nava pasana silai, navapasanam eppadi irukum. bogar navapasana silaiyai engu seithar, 18 siddharkal, abhisega paal palagal, பழனி முருகன் ராஜ அலங்காரம், பழனி முருகன் அலங்காரம் நேரம், பழனி முருகன் அலங்காரங்கள், முருகன் கோவில் சரித்திரம், பழனி முருகன் படம், பழனி முருகன் சிலை ரகசியம், பழனி முருகன் அலங்கார நேரம், நவபாஷாண சிலைகள், நவபாஷாணம் செய்முறை நவபாஷாணம் என்றால் என்ன, பழனி முருகன் சிலை, 64 பாஷாணம், பழனி முருகன் சிலை ரகசியம், நவபாஷாண லிங்கம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், நவபாசானம், மருத்துவ பலன், குணம், பயன்கள், போகர் வாழ்ந்த காலம், பழனி முருகன் சிலை செய்த சித்தர்கள் யார்significance of abhishekam, how to perform abhishekam at home,science behind abhishekam,abhishekam in tamil,abhishekam items for lord ganesha, abhishekam meaning in malayalam, abhishekam items for amman, milk abhishekam